கப்பலை தகர்க்கும் ராக்கெட், ராட்சத பீரங்கி - ரஷியாவை அச்சுறுத்தும் அமெரிக்கா


கப்பலை தகர்க்கும் ராக்கெட், ராட்சத பீரங்கி - ரஷியாவை அச்சுறுத்தும் அமெரிக்கா
x

உக்ரைனுக்கு 7 ஆயிரத்து 812 கோடி ரூபாய் மதிப்பில் ஆயுதங்களை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்ற ரஷிய படைகள் போரை தீவிரப்படுத்தியிருக்கிறது. போதிய ஆயத பலம் இல்லாது பின்வாங்கும் உக்ரைன் ஒவ்வொரு நகரங்களையும் இழந்து வருகிறது. அங்கு பேரழிவை சந்திப்பதாகவும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்க வேண்டும் எனவும் உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் உக்ரைனுக்கு மீண்டும் ஆயுதம் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். 7 ஆயிரத்து 812 கோடி ரூபாய் மதிப்பில் கடற்படை கப்பல்களை தகர்க்கும் ராக்கெட்கள், ஹோவிட்சர் பீரங்கிகள், நவீன ராக்கெட் ஏவும் கட்டமைப்பு உள்ளிட்ட ஆயுதங்களை அமெரிக்கா வழங்கயிருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

இதுபோக ஆயிரத்து 757 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட மனிதநேய உதவி உக்ரைனிய மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


Next Story