"கிழக்கில் ரஷியா உண்மையான நரகத்தை உருவாக்கி வருகிறது" - உக்ரைன் அரசு


கிழக்கில் ரஷியா உண்மையான நரகத்தை உருவாக்கி வருகிறது - உக்ரைன் அரசு
x

தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதலை நடந்து வருகின்றன.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தனது படைகளை அனுப்பி கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை அங்கு இடைவிடாமல் போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள பெரும்பாலான நகரங்களை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் கடுமையான போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷிய படை கைப்பற்றியது. மேலும் ரஷிய ராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், கிழக்கில் ரஷியா ஒரு புதிய நரகத்தை உருவாக்கி வருவதாக உக்ரைனைச் சேர்ந்த மாகாண கவர்னர் செர்ஹி ஹைதை தெரிவித்துள்ளார். இரவு முழுவதும் ரஷிய படைகள் ராக்கெட் ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார். மேலும் தங்களால் முடிந்த அளவிற்கு ரஷிய படைகளின் முன்னேற்றத்தை தடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story