உக்ரைனில் அதிபர் புதினின் அனைத்து இலக்குகளும் நிறைவேற்றப்படும் - ரஷிய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி


உக்ரைனில் அதிபர் புதினின் அனைத்து இலக்குகளும் நிறைவேற்றப்படும் - ரஷிய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி
x

உக்ரைனில் ரஷியா ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்தாக வேண்டும் என்று காலக்கெடு எதையும் துரத்தவில்லை.

மாஸ்கோ,

உக்ரைன் மீதான போர் இன்று நான்காவது மாதத்தில் நுழைகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட போர் 3 மாதத்தை கடந்து நடைபெற்று வருகிறது. உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் பொருளாதார தடைகள் இருந்தபோதிலும், போர் நடவடிக்கைகளிலிருந்து ரஷிய அதிபர் புதின் எந்த நேரத்திலும் பின்வாங்கும் அறிகுறி இல்லை.

இந்த நிலையில், ரஷிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று பேட்டியளித்த அதிபர் புதினின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர், உக்ரைனில் ரஷிய அதிபர் புதினின் அனைத்து இலக்குகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

ரஷிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பத்ருஷேவ் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"உக்ரைனில் ரஷியா ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்தாக வேண்டும் என்று காலக்கெடு எதையும் துரத்தவில்லை. உக்ரைனில் அதிபர் புதினின் அனைத்து இலக்குகளும் நிறைவேற்றப்படும். காலக்கெடுவால் கட்டுப்படுத்தப்படாமல் உக்ரைனில் ரஷ்யா தனது இலக்குகளை அடையும். ஏனென்றால் வரலாற்று உண்மை உட்பட உண்மை நம் பக்கம் உள்ளது.

நாசிசம் 100 சதவீதம் ஒழிக்கப்பட வேண்டும் அல்லது இன்னும் சில ஆண்டுகளில் அது இன்னும் அசிங்கமான வடிவத்தில் மீண்டும் தலை தூக்கும்.

ரஷ்யாவைக் கட்டுப்படுத்தவே மேற்கத்திய உலகம் உக்ரைனைப் பயன்படுத்தியது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவுக்கு உகந்த சூழல், ஒரு முடிவில்லாத சண்டையாக உள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மூன்று மாத ராணுவ நடவடிக்கையின் போது, ரஷ்யப் படைகள் பல பின்னடைவுகளைச் சந்தித்தன. மேலும், குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் போரை நியாப்படுத்தி ரஷிய அதிபர் புதின் முன்மொழிந்த கருத்துகளை அவருடைய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான பத்ருஷேவ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story