ஜப்பானின் மத்திய பகுதியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு


ஜப்பானின் மத்திய பகுதியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு
x

ஆசியாவின் தீவு நாடான ஜப்பானின் மத்திய பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.



டோக்கியோ,



ஜப்பானின் மத்திய பகுதியில் இஷிகவா மாகாணத்தில் சுசு நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.

எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

ஆனால், நில சரிவு அல்லது பொருட்கள் கீழே விழுவது போன்ற சம்பவங்கள் நடைபெறும் சாத்தியம் உள்ளது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் கவனமுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று ஹோகுரிகு ஷின்கான்சென் புல்லட் ரெயில்கள் திட்டமிட்டபடி இயக்கப்பட்டு வருகின்றன என கிழக்கு ஜப்பான் ரெயில்வே நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஷிகா அணு உலையிலும் எந்தவித பாதிப்பும் இல்லை என ஹோகுரிகு மின்சக்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.


Next Story