எகிப்து: கடற்கரையில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தபோது சுறா தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு


எகிப்து: கடற்கரையில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தபோது சுறா தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு
x

Image Courtesy: AFP via Getty Images

எகிப்தில் கடற்கரையில் நீச்சலடித்துக்கொண்டிருந்த 2 பெண்கள் சுறா தாக்கி உயிரிழந்தனர்.

கெய்ரோ,

எகிப்து நாட்டின் ஹூர்ஹடா மாகாணம் செங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில், ஹூர்ஹடா மாகாணத்தில் உள்ள ஷஹல் ஹஹ்ரீஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். சிலர் கடலில் குளித்துக்கொண்டிந்தனர்.

அப்போது, கடற்கரையில் நீச்சல் அடித்து குளித்துக்கொண்டிந்த 2 பெண்களை சுறா தாக்கியது. சுறா தாக்கியதில் படுகாயமடைந்த 2 பெண்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

ஆனால், அந்த 2 பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த 2 பெண்களும் ஆஸ்திரேலியா, ரூமெனியா நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story