ரஷிய ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்த சிவிரோடோனெட்ஸ்க் நகரம்


ரஷிய ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்த சிவிரோடோனெட்ஸ்க் நகரம்
x

உக்ரைனின் சிவிரோடோனெட்ஸ்க் நகரம் முழுவதும் ரஷிய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது என அந்நகர மேயர் தெரிவித்து உள்ளார்.


கார்கிவ்,



உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போரானது தொடர்ந்து 4 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனின் கிழக்கு நகரான சிவிரோடோனெட்ஸ்க்கை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாக, போர் நடைபெறும் பிற பகுதிகளில் இருப்பில் உள்ள படை வீரர்களில் பலரை அந்நகருக்கு செல்லும்படி சமீபத்தில் ரஷியா அனுப்பி வைத்தது.

இதனை லுகான்ஸ்க் நகர கவர்னர் செர்ஹை கைடாய் உறுதிப்படுத்தினார். சிவிரோடோனெட்ஸ்க் நகரின் பல பகுதிகளை ரஷியா கட்டுக்குள் கொண்டு வந்தபோதிலும், முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றும் கவர்னர் செர்ஹை கூறினார்.

சமீபத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சிவிரோடோனெட்ஸ்க் நகர் அருகே படை வீரர்கள் முகாமிட்டுள்ள பகுதிக்கு மீண்டும் சென்றார். போரை முன்னெடுத்து செல்லும் வீரர்களை தைரியம் வாய்ந்தவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள் என்று புகழ்ந்து கூறினார். அவர்களுக்கு ஊக்கம் ஏற்படும் வகையில் பேசினார்.

இந்நிலையில், உக்ரைனின் சிவிரோடோனெட்ஸ்க் நகரம் முழுவதும் ரஷிய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன என அந்நகர மேயர் தெரிவித்து உள்ளார் என்று தகவல் வெளிவந்து உள்ளது.


Next Story