'இதுபோன்ற பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது சாத்தியமற்றது' - துருக்கி அதிபர் எர்டோகன்


இதுபோன்ற பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது சாத்தியமற்றது - துருக்கி அதிபர் எர்டோகன்
x

இதுபோன்ற பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது சாத்தியமற்றது என்று துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் கூறினார்.

இஸ்தான்புல்,

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி - சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் தற்போதைய நிலவரப்படி துருக்கியில் 9 ஆயிரத்து 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 2 ஆயிரத்து 992 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகள், நிலநடுக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அதிபர் தாயூப் எர்டோகன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்யவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

கடும் விமர்சனங்களை தொடர்ந்து நிலநடுக்கத்தின் மையமாக இருந்த ஹரமனமராஸ் நகரில் அதிபர் எர்டோகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.


Next Story