டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரிகளை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்

டுவிட்டரை விலைக்கு வாங்கியதும் டுவிட்டரின் சி.இ.ஓ.வான அமெரிக்க வாழ் இந்தியர் பராக் அகர்வால் உள்ளிட்ட நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கி உள்ளார்.
வாஷிங்டன்,
தொழில்துறை ஜாம்பவானான உலகப் பணக்காரர் எலான் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தார். அதன்பின்னர் டுவிட்டரை தாம் வாங்கவில்லை என்று அறிவித்தார். பின்னர் டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை, இல்லை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார்.
இந்நிலையில் அவர் டுவிட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கைகழுவும் தொட்டியை தூக்கிக் கொண்டு சென்றார். அந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த அவர் அதற்கு தலைப்பு வைத்திருந்ததில் பல உள் அர்த்தங்கள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. 'நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன். அது மூழ்கட்டும்' என்று பதிவிட்டிருந்தார். Let that sink in! என்ற அவருடைய டுவீட் பணக்காரத்தனத்தின் உச்சம் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை நேற்று அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது. அவர் மட்டுமல்ல ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். இதனை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் எலான் மஸ்க் தரப்போ, ட்விட்டர் தரப்போ இதுவரை இந்த பணி நீக்கங்களை உறுதி செய்யவில்லை.






