உக்ரைன் போர்: ஆக்கிரமிப்பு பகுதிகளில் ரஷியாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது


உக்ரைன் போர்: ஆக்கிரமிப்பு பகுதிகளில் ரஷியாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
x

Image Courtacy: AFP

உக்ரைனில் ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ரஷியாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த 5 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ரஷிய படைகள் உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ளன. அதே வேளையில் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ரஷியாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அங்கு உக்ரைன் ராணுவத்துக்கு உதவும் விதமாக பல கொரில்லா படைகள் உருவாகி உள்ளன.

இந்த கொரில்லா படைகளை சேர்ந்தவர்கள் ரஷிய சார்பு அதிகாரிகளை கொலை செய்வது, ரஷிய படைகளின் நகர்வை தடுக்கும் விதமாக பாலங்கள் மற்றும் ரெயில்பாதைகளை தகர்ப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் எதிர்ப்பு ரஷிய படைகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் கேள்விக்குறியாகி உள்ளன.

இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தில் உள்ள ரஷிய ராணுவத்துக்கு சொந்தமான விமானப்படை தளத்தில் நேற்று பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. எனினும் இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என ரஷியா தெரிவித்துள்ளது.


Next Story