அமெரிக்கா: மேரிலாண்டில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி


அமெரிக்கா: மேரிலாண்டில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
x

மேரிலாண்டில் உள்ள உற்பத்தி ஆலை ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேரிலாண்ட்,

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள மேரிலாண்ட் நகரத்தில் உள்ள உற்பத்தி ஆலை ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

வடக்கு மேரிலாண்டில் உள்ள கொலம்பியா இயந்திரத் தொழிற்சாலை என்று கூறப்படும் உற்பத்தி நிலையத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பால்டிமோர் நகரிலிருந்து 75 மைல் தொலைவில் உள்ள ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள கொலம்பியா இயந்திரத் தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை என்று வாஷிங்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் நியூயார்க், டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமாவில் நடைபெற்ற பல உயர்மட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் துப்பாக்கி வன்முறைச் சட்டங்களை கடுமையாக்குவதற்காக குரலெழுப்ப வழிவகுத்தது.

இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்கா குறைந்தது 110 பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை எதிர்கொண்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் காரணமாக 17,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்.


Next Story