இந்தியாவுடனான உறவு நல்ல நிலையில் உள்ளது - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்


இந்தியாவுடனான உறவு நல்ல நிலையில் உள்ளது - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
x

இந்தியாவுடனான உறவு நல்ல நிலையில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா 115-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அதேவேளை, போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. ஆனாலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், எரிபொருளை ஐரோப்பிய நாடுகள் வாங்கி வருகின்றது. உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீது ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

கடந்த மாதத்தில் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் விநியோகம் செய்த நாடுகள் பட்டியலில் சவுதியை பின்னுக்கு தள்ளி ரஷியா இடண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் நெட் பிரின்ஸ் நேற்று முன் தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், இந்தியாவுக்காக அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா தயாராகாத மற்றும் கூட்டாளியாக இல்லாத சமயத்தில் கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான உறவு வளர்ந்துவிட்டது' என்றார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைனில் 2 அமெரிக்கர்கள் ரஷிய படையினரால் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் மற்றும் இந்தியா குறித்த கேள்விகள் இடம்பெற்றது.

அதற்கு பதிலளித்த ஜோ பைடன், உக்ரைனில் மாயமான 2 அமெரிக்கர்கள் எங்கு உள்ளனர் என எனக்கு தெரியவில்லை. அமெரிக்கர்கள் உக்ரைனுக்கு செல்லக்கூடாது என நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். நான் இந்தியாவுக்கு 2 முறை சென்றுள்ளேன், மீண்டும் செல்வேன். இந்தியாவுடனான எனது உறவு மிகவும் நல்ல நிலையில் உள்ளது' என்றார்.


Next Story