அமெரிக்கா: தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பெண்


அமெரிக்கா: தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பெண்
x

டெக்சாசில் தன்னை தாக்கிய நபரின் மீது பெண் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 2 முறை சுட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. அந்நாட்டில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரம், அமெரிக்க மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஒரு பெண்ணின் காரை மறித்து அவரிடம் மர்ம நபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அங்கு நின்றிருந்த மற்றொரு பெண் மீதும் அந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலின் போது, அந்த பெண் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த நபர் மீது 2 முறை சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த நபர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story