இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புகிறோம் - பாகிஸ்தான்


இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புகிறோம் - பாகிஸ்தான்
x

ஐக்கிய நாடுகளின் 77-வது பொதுச் சபை அமர்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நியூயார்க்,

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஐக்கிய நாடுகளின் 77-வது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, "பாகிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் இந்த உலகத்தை விட்டு சென்றுள்ளனர். இன்னும் பலர் நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆபத்தில் உள்ளனர்.

ஆக்கபூர்வமான சூழலை உருவாக்குவதற்கு இந்தியா நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த 1947-ம் ஆண்டு முதல் 3 போர்களை சந்தித்து உள்ளோம். அதன் விளைவாக இரு தரப்பிலும் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை மட்டுமே அதிகரித்தது.

நமக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள், பிரச்சனைகளை அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்கள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டியது இப்போது நம் கையில் உள்ளது.நாம் அண்டை நாடுகள். நாம் அமைதியாக வாழ்வதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வதும் நம்முடைய விருப்பம்.

இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். பிரச்சினைகளை தீர்க்க போர் தீர்வாகாது. அமைதியான பேச்சுவார்த்தைகளால் மட்டுமே பிரச்சினைகளை தீர்க்க முடியும், இதனால் வரும் காலத்தில் உலகம் மிகவும் அமைதியாக மாறும்." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story