"போர் தொடுக்க தயங்க மாட்டோம்" - அமெரிக்காவிடம் சீனா பகிரங்க எச்சரிக்கை


போர் தொடுக்க தயங்க மாட்டோம் - அமெரிக்காவிடம் சீனா பகிரங்க எச்சரிக்கை
x

தைவானை சுதந்திர நாடாக பிரகடனம் செய்ய முயன்றால், போர் தொடுக்க தயங்கமாட்டோம் என்று அமெரிக்காவிடம் சீனா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பெய்ஜிங்,

சிங்கப்பூரில் அமெரிக்கா, சீனா இடையே பிராந்திய அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சீன பாதுகாப்புத்துறை மந்திரி வே வெய் ஃபென்கே மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்டு ஆஸ்டின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, தைவானை சீனாவிடம் இருந்து பிரிக்க முயன்றால், சீன ராணுவம் போர் தொடுக்க தயங்காது என்று வெய் ஃபென்கே எச்சரித்ததாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

மறுபுறம், பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் இருந்து சீனா விலகியிருக்க வேண்டும் என்று லாய்டு ஆஸ்டின் வலியுறுத்தியதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய லாய்டு ஆஸ்டின், பிராந்தியத்தில் சீனாவின் நடவடிக்கை மிகவும் ஆக்ரோஷமாக மாறுகிறது என்றும் எச்சரித்தார்.


Next Story