'நாட்டை உடைக்க முயற்சித்தால்...' - தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை


நாட்டை உடைக்க முயற்சித்தால்... - தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
x

Image Courtesy: AFP

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிஜீங்,

தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். ஆனால், தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கருத்துகிறது. தேவை ஏற்படும் சூழ்நிலையில் தைவான் மீது படையெடுத்து தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொள்வோம் என சீனா எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், தைவானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு நேற்று அளித்த பேட்டியில், சீனா படையெடுத்தால் தைவானை அமெரிக்க படைகள், அமெரிக்க ஆண்கள் பெண்கள் பாதுகாப்போம்' என தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கருத்துக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் மாவொ நிங்க் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரே ஒரு சீனா தான் உள்ளது அதில், தைவானும் ஒரு அங்கம். மக்கள் ஜனநாயக சீன அரசு தான் ஒட்டுமொத்த சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாகும்.

சீனாவை உடைக்க முயற்சிக்கும் எந்த நடவடிக்கையையும் சகித்துக்கொள்ள முடியாது. சீனாவின் இறையாண்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.


Next Story