உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51.81 கோடியாக உயர்வு


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51.81 கோடியாக உயர்வு
x

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.30 கோடியாக அதிகரித்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.30 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63.37 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51.81 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 75,711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 170 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் ஜெர்மனியில் 89,151 பேருக்கும், தைவானில் 63,221 பேருக்கும், பிரான்சில் 53,081 பேருக்கும் இத்தாலியில் 53,573 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.


Next Story