மகாலட்சுமியை வழிபடுவோருக்கு கிடைக்கும் 15 பேறுகள்


மகாலட்சுமியை வழிபடுவோருக்கு கிடைக்கும் 15 பேறுகள்
x

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும், கணவன்-மனைவி இடையே அன்பு, ஒற்றுமை நிலைக்கும் என்பது நம்பிக்கை.

மகாலட்சுமி அருளிய வரலட்சுமி விரதம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 16) அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து மகாலட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் பதினைந்து பேறுகள் வருமாறு:

1. மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு செல்வம் மற்றும் செழிப்பு பெருகும்.

2. எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற அதிர்ஷ்டம் கிடைக்கும்.

3. கல்வியில் சிறந்து விளங்க ஞானம் வளரும்.

4. வீட்டில் தானியம், பணம், பொருள் வளம் பெருகும்.

5. முகத்தில் அழகு மற்றும் தேஜஸ் அதிகரிக்கும்.

6. எதிர்கொள்ளும் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் திறன் வளரும்.

7. நோய்கள் அண்டாமல் நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம்.

8. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும், கணவன்-மனைவி இடையே அன்பு, ஒற்றுமை நிலைக்கும்.

9. குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்.

10. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

11. நல்ல புகழ் கிடைக்கும்.

12. மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

13. செய்த பாவங்கள் தீர மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. இறுதியில் மோட்சம் பெற வழி வகுக்கும்.

15. மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு தேவையான அனைத்து வளங்களும் தானாகவே வந்து சேரும்.


Next Story