1. திருப்பாவை-திருவெம்பாவை
திருப்பாவை மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏர்ஆர்ந்த கண்ணி யசோதை இ
திருப்பாவை
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர்ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களே! பெருமைமிகு ஆயர்குடியில் பிறந்த செல்வவளம் கொண்ட சிறுமி களே! கூர்மை நிறைந்த வேல் கொண்ட நந்த கோபனுக்கும், அழகுபொருந்திய விழிகளை கொண்ட யசோதைக்கும், பிறந்த சிங்கக்குட்டி பரந்தாமன். அவன் கார்மேகவண்ணன். சிவந்த விழிகளையும், சூரியனையும் சந்திரனையும் போன்று ஒளிவீசும் முகத்தை உடையவன். அவன் நம் நோன்பிற்கு வேண்டிய பறை தருவான். அவனைப் புகழ்ந்து பாடி இம்மார்கழித் திங்கள் நிறைநிலா நாளில் நீராடி மகிழ்வோம் வாருங்கள்.
திருவெம்பாவை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடம்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசுஏலோர் எம்பாவாய்
ஒளி நிறைந்த, விரிந்த விழிகளை கொண்ட நங்கையே! தொடக்கமும் முடிவும் எதுவுமில்லாத ஒளிப்பிழம்பாய் ஒளிரும் ஆண்டவனை நாங்கள் போற்றிப் புகழ்ந்து பாடக்கேட்டும் நீ துயில்கின்றாய். உன் செவிகள் செயலிழந்து போய்விட்டனவா? சிவபெருமானின் சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் வாழ்த்திப் பாடிய பேரோசையை கேட்டவுடனே விம்மியழுது, தன்னை மறந்து, மலர்ப்படுக்கையிலிருந்து எழுந்து புரண்டு மயங்கிக் கிடக்கிறாள் ஒரு பெண். ஆனால் நீயோ இன்னும் தூங்கியவண்ணம் இருக்கிறாய். இது வியப்பைத் தருகிறது. இனியாவது எழுந்துவந்து நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்.

Next Story