வழிகாட்டும் ஜோதிடம்
கேள்வி:– எனக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. காளஹஸ்தி, திருமணஞ்சேரி, திருநாகேஸ்வரம், திருப்பதி ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தோம். திருமணம் எப்பொழுது நடைபெறும்? அரசாங்கத்தில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளதா? –(வி.மலர்விழி, குடியாத்தம்).
பதில் அளிப்பவர் ‘ஜோதிடக் கலைமணி’ சிவல்புரி சிங்காரம்.
கேள்வி:– எனக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. காளஹஸ்தி, திருமணஞ்சேரி, திருநாகேஸ்வரம், திருப்பதி ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தோம். திருமணம் எப்பொழுது நடைபெறும்? அரசாங்கத்தில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளதா? –(வி.மலர்விழி, குடியாத்தம்).
பதில்:– தங்கள் ஜாதகப்படி சந்திரனுக்கு சப்தம ஸ்தானத்தில், குரு, சுக்ரன், புதன், சூரியன் ஆகிய நான்கு கிரகங்களும் இணைந்திருக்கின்றன. களத்திர ஸ்தானாதிபதி சனி, பகை கிரகமான செவ்வாயோடு கூடியிருக்கிறார். எனவேதான் திருமணம் தள்ளிப் போகிறது. இருப்பினும் தை 13–ந் தேதிக்கு மேல் நல்ல இடத்தில் திருமணம் முடியும். உத்தியோக ஸ்தானாதிபதி ராஜ கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருப்பதால் அரசாங்கத்தில் பணிபுரியும் அமைப்பு உண்டு.
கேள்வி:– நான் 30 வருடங்களாக டீக்கடை நடத்தி வருகிறேன். போட்டி அதிகமாக உள்ளதால், கடையை விரிவாக்கம் செய்யலாம் என்று நினைக்கிறேன். வீடு கட்டும் யோகம் இருக்கிறதா? –(ஆர்.ஹரிதாஸ், திருச்செங்கோடு).
பதில்:– உங்கள் ஜாதகப்படி தொழில் ஸ்தானம் நன்றாக இருக்கிறது. ஸ்தானாதிபதி சூரியன் உணவுப் பொருளுக்கு அதிபதியான செவ்வாயோடு இணைந்து லக்னத்தில் இருக்கிறார். சூரியனோடு செவ்வாய் இணைந்திருப்பதால், சூடான உணவுப் பொருட்களைத் தயாரித்து வழங்கும் கடைகளை நடத்துவதன் மூலம் லாபம் பெறலாம். எனவே தாங்கள் நடத்தும் கடை பொருத்தமானதுதான். வீடு கட்டும் யோகம் இருக் கிறது.
கேள்வி:– எனது புதல்வர் எம்.எஸ்.சி படித்திருக்கிறார். கைநிறையச் சம்பளமும் வாங்குகிறார். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதில் தாமதம் ஏற்படுகிறது. எப்பொழுது அவர் எண்ணங்கள் நிறைவேறும்? –(பாலகுரு, நாகர்கோவில்).
பதில்:– தங்கள் புதல்வர் ஜாதகப்படி, ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் வெளிநாடுசெல்லும் யோகம் உண்டு. அதாவது 2017, ஜூலை 27–ந் தேதி ராகு–கேது பெயர்ச்சி நிகழ விருக்கிறது. அதன் பிறகு செய்யும்முயற்சிகள் கைகூடும்.
கேள்வி:– எனது மகனுக்கு அரசாங்க வேலை எப்பொழுது கிடைக்கும்? –(கே.வசந்தன், நாகப்பட்டினம்).
பதில்:– தங்கள் புதல்வர் ஜாதகப்படி உத்தியோக ஸ்தானாதிபதி செவ்வாய், சனியோடு கூடியிருக்கிறார். மேலும் ராகு– கேதுக்களுக்குள் அனைத்துக் கிரகங்களும் சிக்கியிருக்கின்றன. தொழில் ஸ்தானாதிபதி அஷ்டமாதிபதியுடன் இணைந்திருக்கிறார். எனவே அரசு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். தனியார் துறையில் பணிபுரியும் வாய்ப்பே அதிகம் உள்ளது.
கேள்வி:– எனது மகனுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. நிறையப் பரிகாரங்கள் செய்துவிட்டோம். எப்பொழுது திருமணம் முடியும்? –(கே.உன்னிகிருஷ்ணன், திருச்சி).
பதில்:– தங்கள் புதல்வி ஜாதகத்தில் குரு லக்னத்தையும், சந்திரனையும் பார்க்கிறார். பூரண வியாழ நோக்கம் உள்ளது. ஆகஸ்டு வரை இந்த வியாழ நோக்கம் இருக்கின்றது. எனவே பிப்ரவரி மாதத் திற்கு மேல் வரும் திருமணப் பேச்சு முடிவாகும். நீங்கள் செய்த பரிகாரங்களேபோதுமானது. சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபட்டு வருவதன் மூலம் தடைகள் அகலும்.
கேள்வி:– என் மகன் பி.காம் முடித்துவிட்டு, என் கணவர் செய்யும் காப்பிக் கொட்டை வியாபாரத்தைச் செய்து வருகிறார். வசதி நன்றாக இருக்கின்றது. இதே தொழிலைச் செய்யலாமா? அல்லது வேறுதொழிலைச் செய்யலாமா?, திருமணத்திற்கு பிறகு என் மகனுக்கு ஆண் வாரிசு இருக் கிறதா?. –(வளர்மதி நாராயணன், சேலம்).
பதில்:– தாங்கள் அனுப்பிய ஜாதகப்படி பார்க்கும் பொழுது, லக்னத்திலேயே சனி இருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் சனி உச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு பாக்யாதிபதி செவ்வாய் இணைந்திருக்கிறார். எனவே இதே தொழிலைச் செய்யலாம். எந்தக் குறையும் ஏற்படாது. புத்திர ஸ்தானாதிபதி நல்ல நிலையில் சஞ்சரிக்கிறார். மேலும் புத்திரகாரகன் குரு லக்னத்தைப் பார்க்கிறார். எனவே எதிர்பார்த்தபடி வாரிசு அமையும்.
கேள்வி:– எனது புதல்வருக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? அவரது எதிர்காலம் எப்படி இருக்கும்? –(பி.அருண்பிரசாத், திருச்சி).
பதில்:– உங்கள் புதல்வர் ஜாதகப்படி உத்தியோக ஸ்தானாதிபதி சந்திரன் நீச்சம் பெற்று, உச்சம் பெற்ற குருவால் பார்க்கப்படுகிறார். எனவே குருசந்திர யோகம் உண்டாகிறது. ஆகவே அரசு வேலை கிடைக்கும் அமைப்பு உண்டு. புதஆதித்ய யோகம் மற்றும் கோதண்ட ராகு ஆகிய அமைப்பு ஜாதகத்தில் இருக்கிறது. தற்சமயம் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. சனி விலகிய பிறகு படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலம் இனிமையாக இருக்கும்.
கேள்வி:– நான் எந்த வேலைக்குச் சென்றாலும் பிரச்சினையாக இருக்கிறது. எப்பொழுது நிரந்தர வேலை அமையும்? வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா? –(ஜி.ஹரி கிருஷ்ணன், மடிப்பாக்கம்).
பதில்:– தங்கள் ஜாதகப்படி தற்சமயம் ஏழரைச்சனியில் பாதச்சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. உத்தியோக ஸ்தானத்தை செவ்வாய், சனி இரண்டும் இணைந்து பார்க்கிறார்கள். மேலும் பார்க்கும் கிரகமான அவர்கள் இருவரும் வக்ர இயக்கத்திலேயும் இருக் கின்றனர். எனவேதான் வேலையும் நிரந்தரமில்லை. பிரச்சினையும் அதிகரிக்கிறது. சனி விலகிய பிறகு, அதாவது 2017 டிசம்பர் மாதத்திற்கு மேல் உங்களது எண்ணங்கள் நிறைவேறும். வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். அதற்கிடையில் ஏப்ரல் மாதத்திற்கு மேல் நல்லவேலை அமையும்.
கேள்வி:– எனக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது தனியார் துறையில் வேலை கிடைக்குமா? வேலை கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? –(தி.கண்ணன், தஞ்சாவூர்).
பதில்:– உங்கள் ஜாதகப்படி சூரியனோடு ராகு சேர்க்கை பெற்று செயல் ஸ்தானத்தைப் பார்க்கிறார். உத்தியோக ஸ்தானத்தில் செவ்வாய் வீற்றிருந்து சனியால் பார்க்கப்படுகிறார். எனவே தனியார் துறையில் வேலை பார்க்கும் வாய்ப்பே அதிகம் இருக்கிறது. குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே நன்மைதரும். பார்க்கும் குருவைப் பலப்படுத்த வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது.
கேள்வி:– நாங்கள் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறோம். நிறையப் பிரச்சினைகள் உருவாகிறது. வேறு வீடு மாறுவது நல்லதா? –(வள்ளிக்கண்ணு ராமநாதன், திருச்சி).
பதில்:– தங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருக்கிறது. எனவே பூர்வீக வீட்டில் வசித்து வருவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. தற்சமயம் தங்கள் கணவர் ஜாதகப்படி அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே தான் மன நிம்மதிக் குறைவோடு வசிக்கிறீர்கள். உங்கள் இருவர் ஜாதகப்படியும் யோகபலம் பெற்றநாள் பார்த்து கணபதி ஹோமம் வைப்பது நல்லது. அதன்பிறகு நன்மைகள் நடைபெறும்.
கேள்வி:– என் மகனுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளில் விவாகரத்து ஆகிவிட்டது. தற்சமயம் வெளிநாட்டில் வசித்து வருகிறார். மீண்டும் மறு மண வாய்ப்பு எப்பொழுது கைகூடி வரும்? –(எஸ்.பி.விஸ்வநாதன், சேலம்).
பதில்:– தங்கள் புதல்வர் ஜாதகப்படி தற்சமயம் திசா நாதனுக்கு புத்திநாதன் 6–ம் இடத்தில் இருக்கிறார். புத்திநாதனுக்கு தசா நாதன் 8–ம் இடத்தில் இருக்கிறார். எனவே சஷ்டாஷ்டம தோஷ காலமாக தற்சமயம் இருக்கிறது. அது முடிந்த பிறகே திருமணப் பேச்சை தொடங்குவது நல்லது. இன்னும் 1½ ஆண்டு காலம் வரை சனி புத்தி இருக்கிறது. அதன்பிறகு மறுமணம் பற்றிச் பேசலாம்.
கேள்வி:– எனக்கு கடன் சுமை அதிகமாக உள்ளது. அவை எப்பொழுது அடைபடும்?. பார்க்கும் தொழிலை மாற்றம் செய்வது நல்லதா? தற்சமயம் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்து வருகிறேன். அதை மாற்றி ஓட்டல் தொழில் செய்யலாமா? –(என்.தியாகராஜன், நாமக்கல்).
பதில்:– உங்கள் ஜாதகப்படி தொழில் ஸ்தானத்தில் சனி பலம் பெற்றிருக்கிறார். எனவே நீங்கள் நடத்தும் இரும்புத் தொழில் பொருத்தமான தொழில் தான். செவ்வாய் பலநீழந்து நீச்சம் பெற்றிருக்கிறார். செவ்வாய் பலம் பெற்றிருந்தால் தான் உணவு சம்பந்தப்பட்ட தொழிலில் லாபம் கிடைக்கும். எனவே வேறு தொழில் மாற்றம் செய்யவேண்டாம். கடன் சுமை அதிகமாக இருக்கின்றதே? என்று எழுதி இருக்கிறீர்கள். ஏப்ரல் மாதத்திற்கு மேல் படிப்படியாக கடன் சுமை குறையும். தொழிலும் சிறப்பாக இருக்கும்.
கேள்வி:– எனது மகளுக்கு கடந்த இரண்டு வருடமாக வரன் பார்த்தும் முடிவாகவில்லை. எப்பொழுது திருமணம் நடைபெறும்? –(ஜமுனா, அருப்புக்கோட்டை).
பதில்:– தங்கள் புதல்வியின் ஜாதகப்படி களத்திர ஸ்தானாதிபதி சுக்ரன் அஷ்டமாதிபதி செவ்வாயோடு இணைந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் கேதுவாலும் பார்க்கப் படுகிறார். எனவேதான் திருமணம் தடைப்பட்டுக் கொண்டு வருகிறது. இருப்பினும் ஜனவரி மாதத்திற்கு மேல் வரும் திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
கேள்வி:– எனது மகள் ஆசிரியர் பயிற்சி முடித்து அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வேலை கிடைக்குமா?, அரசு வேலையில் உள்ள வரனாகக் கிடைக்குமா? –(ஆர்.வினோதா, பட்டுக்கோட்டை).
பதில்:– தங்கள் புதல்வி ஜாதகப்படி தற்சமயம் சப்தம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். உத்தியோக ஸ்தானாதிபதி வியாழன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். செவ்வாய், சனி சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்றார். 10–க்கு அதிபதியான சந்திரன் உச்சம் பெற்றிருக்கிறார். எனவே அரசு வேலைக்காக செய்த முயற்சி கைகூடும். மேலும் அரசு வேலையில் உள்ள வரனாகவே வாழ்க்கைத் துணை அமையும்.
கேள்வி:– எனது மகள் தற்சமயம் நல்ல வேலையில் இருக்கிறார். இருப்பினும் இதைவிட வேறு நல்ல வேலை கிடைக்குமா? அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷமோ, சர்ப்ப தோஷமோ இருக்கிறதா? –(வி.வி.கிருஷ்ணன், சென்னை).
பதில்:– தங்கள் புதல்வி ஜாதகத்தில் உத்தியோக ஸ்தானம் நன்றாக இருக்கிறது. ஏழரைச் சனியில் இரண்டாவது சுற்று நடைபெறுகிறது. திருமணம் முடியும் வரை இந்த வேலையிலேயே இருப்பதுதான் நல்லது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் கிடையாது. அதே நேரம் லக்னத்தில் ராகுவும், 7–ல் கேதுவும் இருப்பதால் கால சர்ப்பதோஷம் இருக்கிறது. அதற்கு முறையாக நாகசாந்திப் பாரிகாரத்தை செய்துகொள்வது நல்லது.

Next Story