மகர விளக்கு விழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி புறப்படுகிறது
மகர விளக்கு விழாவையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி புறப்படுகிறது.
சபரிமலை

மண்டல பூஜை
நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மாதம் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.
மண்டல பூஜை கடந்த 26-ந் தேதி நடந்தது. பிரசித்திப்பெற்ற மண்டல பூஜையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
நடை திறப்பு
மகர விளக்கு விழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடை திறக்கப்படுகிறது.
மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். அன்றைய தினம் மற்ற விஷேச பூஜைகள் நடைபெறாது. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.
நாளை(சனிக்கிழமை) முதல் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்அபிஷேகம், உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும்.
பிரசித்திப் பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற ஜனவரி 14-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மகர விளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலியகோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஜனவரி 12-ந் தேதி புறப்படும். முன்னதாக எருமேலி பேட்டை துள்ளல் 11-ந் தேதி நடைபெறும்.
16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இரவில் படி பூஜை நடைபெறும். 20-ந் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.
குருவாயூர்
சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலும் குருவாயூர் அய்யப்பன் தரிசனத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ஜனவரி 20-ந் தேதி வரை மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக குருவாயூர் கோவில் நடை மாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story