17. திருப்பாவை - திருவெம்பாவை
17. திருப்பாவை - திருவெம்பாவை அம்பரமே தண்ணீரே சோறேஅறம் செய்யும் எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய் அம்பரம் ஊடுஅறுத்து ஓங்கிஉலகு அளந்த உம்பர் கோமானே! உறங்
-திருப்பாவை
அம்பரமே தண்ணீரே சோறேஅறம் செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடுஅறுத்து ஓங்கிஉலகு அளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல்அடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
உடுப்பதற்குரிய ஆடைகள், குடிக்கும் தண்ணீர், பசியாற உணவு முதலியவற்றை கேட்பவர்களின் மனம் நிறைவாகும்படி கொடுத்து அருளும் எங்கள் தலைவனே! நந்த கோபாலனே! நீ துயில் நீங்கி எழுவா யாக. பூங்கொடியே! குலவிளக்கே! எங்கள் தலைவியே! யசோதை தாயே! எழுந்தருள்வாயாக. ஆகாயம் பிளக்க உயர்ந்து நின்று அனைத்து உலகை யும் அளந்து முடித்த உத்தமனே! தேவர்களின் தலைவனே! துயில் நீங்கி எழுந்திருப்பாயாக! செம்பொன்னால் செய்த வீரக்கழல் அணிந்த பலதேவரே! நீயும் உன் தம்பி கண்ணனும் துயிலாமல் விழித்தெழ வேண்டும். எங்களுக்கு அருள்புரிய வேண்டும்.
திருவெம்பாவை
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதா
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடுஏலோர் எம்பாவாய்.
இயற்கையான மணம் கொண்ட கூந்தலை உடையவளே! திருமாலிடமோ, நான்முகனி டமோ, தேவர் களிடமோ இல்லாத பேரின் பத்தை நமக்கு வழங்குபவன் இறைவன். நமது அன்புக்கு உகந்து நம்மைச் சீராட்டி இல்லந்தோறும் எழுந்தருளி தாமரைத் திருவடிகளைத் தந்தருள்பவன். அருள்பார்வை கொண்டவன்¢, அமுதமாய் இனிப்பவன். அத்தகைய சிறப்பு மிக்க இறைவனை பாடுவோம். அழகிய தாமரை மலர்கள் நிறைந்த குளத்தில் நீராடுவோம்.

Next Story