ஆன்மிகத் துளிகள்


ஆன்மிகத் துளிகள்
x
தினத்தந்தி 3 Jan 2017 6:15 AM IST (Updated: 2 Jan 2017 5:44 PM IST)
t-max-icont-min-icon

கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு, தண்ணீருக்காக கத்துவதைப் போலத்தான், இறை அருள் கிடைக்கவில்லை என்று கூறுவதும். அருள் எப்போதும் இருப்பது. தன்னை உடனே வெளிப் படுத்திக் கொள்ளும் தெய்வீக

அருள்

கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு, தண்ணீருக்காக கத்துவதைப் போலத்தான், இறை அருள் கிடைக்கவில்லை என்று கூறுவதும். அருள் எப்போதும் இருப்பது. தன்னை உடனே வெளிப்   படுத்திக் கொள்ளும் தெய்வீக அருளை நாம் புரிந்து கொள்ளாமைக்கு அறியாமை ஒன்றே காரணமாக இருக்க முடியும்.

–ரமணர்.


உண்மை

பயந்தவன் தெய்வத்திடம் கடுமையைக் காண்கிறான். நம்பிக்கை உள்ளவன் தெய்வத்தை நண்பனாகவும், ரட்சகனாகவும் காண்கிறான். எதற்கும் அஞ்சாதே. தெய்வம் கேட்ட வரம் கொடுக்கும். ஆனால் நீ கபடு, சூது இல்லாமல் கேட்க வேண்டும். கபடமற்ற உள்ளத்துடன் செய்யும் வேண்டுதலை தெய்வம் மறுப்பதில்லை.

–ஸ்ரீஅன்னை.


சமுதாயம்

எங்கு உயர்ந்த உண்மைகள் நடைமுறையில் இருக்கின்றனவோ, அந்தச் சமுதாயம் தான் சிறந்தது. சமுதாயத்தில், தலைவரிடம் சிறந்த ஒழுக்கம் இல்லாவிட்டால், அவரிடம் நம்பிக்கை வைப்பதற்கு வாய்ப்பில்லை. தலைவர் தூய்மையுடையவராக இருக்கும்போது, உறுதியான நிலைத்த நம்பிக்கையும், பற்றும் ஏற்படுகின்றன.

–விவேனந்தர்.

1 More update

Next Story