கூந்தல் சிவன்
ஆந்திர மாநிலம் கோடிபள்ளி என்ற இடத்திற்கு தெற்கே கொத்தம்பேட்டை என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவபெருமான் தலைமுடி கொண்டையுடன் காட்சியளிக்கிறார். இதே போல் திருநெல்வேலி
ஆந்திர மாநிலம் கோடிபள்ளி என்ற இடத்திற்கு தெற்கே கொத்தம்பேட்டை என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவபெருமான் தலைமுடி கொண்டையுடன் காட்சியளிக்கிறார். இதே போல் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானும் நீண்ட கூந்தலுடன் அருள்பாலிக்கிறார். இது ஒரு அபூர்வமான அமைப்பாகும்.
மச்சக்கார முருகன்
சென்னை வானகரத்தில் இருந்து மேட்டுக் குப்பம் செல்லும் வழியில் அமைந்துள்ளது மச்சக்கார பாலமுருகன் சுவாமி திருக்கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் வலது கன்னத்தில் மச்சம் காணப்படுகிறது. எனவேதான் இந்த முருகப் பெருமான் மச்சக்கார முருகன் என்று அழைக்கப்படுகிறார். இத்தல முருகனை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம், ராகு தோஷம் போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை.
மூன்று தேவியருடன்:
திருப்பார்த்தன்பள்ளி என்ற திருக்கோவிலில் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார். பொதுவாக மூலவராக வீற்றிருக்கும் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு தேவியருடன்தான் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள மூலவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியருடன் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அதே போல் உற்சவ மூர்த்தியும் மூன்று தேவியருடன் காணப்படுகிறது. இது வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத சிறப்பாகும்.

Next Story