ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்
கலியுக தெய்வமாக விளங்கும் திருவேங்கடவ பெருமாளை, ‘ஸ்ரீனிவாசன்’ என்றும் அழைப்பார்கள். இவர் அஷ்ட லட்சுமிகளையும் தன்னகத்தே கொண்டிருப்பவர். பாலாஜி, வேங்கடாஜலபதி, கோவிந்தன், ஏழுமலையான் என
கலியுக தெய்வமாக விளங்கும் திருவேங்கடவ பெருமாளை, ‘ஸ்ரீனிவாசன்’ என்றும் அழைப்பார்கள். இவர் அஷ்ட லட்சுமிகளையும் தன்னகத்தே கொண்டிருப்பவர். பாலாஜி, வேங்கடாஜலபதி, கோவிந்தன், ஏழுமலையான் என பல்வேறு திருப்பெயர்களைப் பெற்றவர். வேண்டுபவர் களுக்கு வேண்டியதைக் கொடுக்கும் அன்பும், அடியார்களின் துயரங்களைப் போக்கும் வல்லமையும் கொண்டவர். தவறுகளை பொறுத்து அருள்வதுடன், தீவினைப் பயன்களையும் போக்குவார்.
திருப்பதியில் வீற்றிருக்கும் வேங்கடவனுக்கு, கோடி கோடியாக பக்தர்கள், காணிக்கைகளைச் செலுத்தி வழிபடுகிறார்கள். அதற்கு காரணம், நினைத்ததை நடத்தி வைப்பவர் கோவிந்தன் என்பதுதான். ஏழுமலையான் வீற்றிருக்கும் மலைக்கு, திருமலை என்பதைத் தவிர வேங்கடாத்திரி, நாராயணாத்திரி, விருஷபாத்திரி என்று பல பெயர்கள் உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலை தெய்வமான ஸ்ரீனிவாசனின் சுப்ரபாதத்தை, முழுவதுமாக சொல்வது என்பது அனைவராலும் முடியாத காரியம். அதே வேளையில் ஸ்ரீனிவாசனின் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால், அனைத்து விதமான பலன்களையும் பெறலாம். தினமும் செய்யும் இறைவழிபாட்டின் போது, ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வருவது சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்
‘ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்’
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவானை அறிவோம். பந்தங்களில் இருந்து விடுபடச் செய்யும், அந்த பரம்பொருளின் மீது தியானம் செய்வோம். ஸ்ரீனிவாசனான அவன் நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருளாகும்.
இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, இறைவனை வழிபடுவதால் விரும்பியது கிடைக்கும். ஆனந்தமான வாழ்வு அமையும். ஸ்ரீனிவாசனின் அருளை எளிதாகப் பெறலாம். பாவங்களைப் போக்கும். 16 வகையான பேறுகளைப் பெறுவீர்கள். மரண பயம் நீங்கும். முக்தி கிடைக்கும்.

Next Story