27. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி


27. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி
x
தினத்தந்தி 10 Jan 2017 11:15 PM GMT (Updated: 10 Jan 2017 5:30 PM GMT)

திருப்பாவை கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக, சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றுஅனைய பல்

திருப்பாவை

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றுஅனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவார
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.


பகைவரை வெல்கின்ற மேன்மைமிக்க குணம் உடைய கோவிந்தனே! உன்னைப்பாடி உன் அருள் வேண்டி நின்றோம். அதனால் நாட்டு மக்கள் புகழும் படியான கை வளையல்கள், காதில் அணியும் தோடுகள் மற்றும் பூக்கள், பெண்கள் கால்களில் அணியும் அணிகலன்கள், மேலும் பல அணிகலன்களை நோன்பு முடிந்த பிறகு நாங்கள் உன்னிடம் சன்மானமாக பெறுவோம். அவற்றைப் பெற்றுக்கொண்டு  புத்தாடைகளை அணிவோம். பால்சோறு முழுவதுமாக மறையும்படி ஊற்றிய நெய் முழங்கையில் வழியுமாறு உண்டு உம்முடன் கூடியிருந்து மனங்குளிர்வோம்.

திருப்பள்ளியெழுச்சி

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு, இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு, இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருவுத்தர கோச
மங்கையுள்ளாய் திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறுஅது கேட்போம்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


பரம்பொருள் என்பது பழச்சுவையா? அமுதச்சுவையா? அது அறிய முடியாததா? அறிவதற்கு எளிதானதா? என்று தேவர்கள்கூட அறிய மாட்டார்கள். ஆனால் எளிய அடியார்களாகிய நாங்கள், ‘இதுவே பரம்பொருள்; இதுதான் அவன் திருவுருவம்Õ என்று சொல்லும்படி எங்களை ஆட்கொண்டாய். தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருஉத்திர கோச மங்கையில் எழுந்தருளி இருப்பவனே! திருப்பெருந்துறைக்கு அரசனே! எம்பெருமானே! உன் கட்டளையின்படி நடப்போம். எம்பெருமானே! திருப்பள்ளி எழுவாயாக!

Next Story