இந்த வார விசே‌ஷங்கள் 31–1–2017 முதல் 6–2–2017 வரை


இந்த வார விசே‌ஷங்கள் 31–1–2017 முதல் 6–2–2017 வரை
x
தினத்தந்தி 31 Jan 2017 8:15 AM IST (Updated: 30 Jan 2017 6:32 PM IST)
t-max-icont-min-icon

31–ந் தேதி (செவ்வாய்)சதுர்த்தி விரதம். காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

31–ந் தேதி (செவ்வாய்)

     சதுர்த்தி விரதம்.

     காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

     மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.

     திருவிடைமருதூர், திருப்புடைமருதூர், குன்றக்குடி, பழனி, திருநெல்வேலி ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.

     பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு கண்டருளல்.

     கீழ்நோக்கு நாள்.

1–ந் தேதி (புதன்)

    முகூர்த்த நாள்.

    திருநெல்வேலி சாலைக்குமார சுவாமி கோவில் வருசாபிஷேகம்.

    திருச்சேறை சாரநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம்.

    காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் சுவாமி பவனி வருதல்.

    திருவிடைமருதூர் சிவபெருமான் வெள்ளி சூரிய பிரபையில் புறப்பாடு.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இருவரும் வெள்ளி சிம்மாசனத்தில் திருவீதி உலா.

    திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    மேல்நோக்கு நாள்.

2–ந் தேதி (வியாழன்)

    முகூர்த்த நாள்.

    சஷ்டி விரதம்.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, இரவு தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.

    திருச்சேறை சாரநாதர் சூரிய பிரபையில் வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.

    காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் கருட சேவை.

    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி கோவில் உற்சவம் ஆரம்பம்.

    சமநோக்கு நாள்.

3–ந் தேதி (வெள்ளி)

    ரத சப்தமி.

    திருப்பதியில் வெங்கடேசப் பெருமாள் ரத சப்தமி திருவிழா.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டின திருவிளையாடல்.

    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சூரிய பிரபையில் பவனி.

    திருச்சேறை சாரநாதர் பரமபதநாதன் திருக்கோலமாய் சே‌ஷ வாகனத்தில் வீதி உலா.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ரத்தின சிம்மாசனத்தில் பவனி.

    சமநோக்கு நாள்.

4–ந் தேதி (சனி)

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நந்தி வாகனத்திலும், அம்மன் யாழி வாகனத்திலும் பவனி வருதல்.

    திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பாடு.

    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.

    பழனி முருகப்பெருமான் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா.

    கீழ்நோக்கு நாள்.

5–ந் தேதி (ஞாயிறு)

    கார்த்திகை விரதம்.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சின்ன வைரத் தேரில் ரத உற்சவம், இரவு தங்கமயில் வாகனத்தில் திருவீதி உலா.

    திருச்சேறை சாரநாதர், ராம அவதாரத்தில் காட்சி அருளல், இரவு அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடு.

    குன்றக்குடி முருகப்பெருமான் தங்க ரதத்தில் பவனி.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை தங்க பல்லக்கிலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வலம் வருதல்.

    கீழ்நோக்கு நாள்.

6–ந் தேதி (திங்கள்)

    முகூர்த்த நாள்.

    திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா.

    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் வலம் வருதல்.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தெப்ப உற்சவம்.

    மேல்நோக்கு நாள்.

Next Story