திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் தேரோட்டம்


திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2017 10:15 PM GMT (Updated: 6 Feb 2017 8:15 PM GMT)

சென்னை திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரி அம்மன் கோவிலில் கடந்த 30–ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. 19–ந்தேதி தேதி வரை நடைபெறும்

பூந்தமல்லி,

இந்த விழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், தேவி கருமாரி அம்மன் 4 மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தில் பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று அதிகாலையில் அம்மனுக்கு, கோ பூஜையுடன் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது.


Next Story