திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூந்தமல்லி,
கோவில் கும்பாபிஷேகம்
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில்.
இந்த கோவிலுக்கு சொந்தமாக அதே பகுதியில் பாலாம்பிகை அம்மன் உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
வேதபுரீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அக்கோவிலை புதுப்பிக்கும் பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது.
புனித நீர் ஊற்றி....அப்பணிகள் முடிவடைந்து, கடந்த சனிக்கிழமை யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை 10 மணி அளவில் ராஜ கோபுர கலசங்கள், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திரளான பக்தர்கள்இதில் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் பாண்டியராஜன், கோவில் இணை ஆணையர் தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க திருவேற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.