ஆன்மிகம்

தோ‌ஷங்கள் விலக பரிகார பூஜை + "||" + Humours Atonement Puja

தோ‌ஷங்கள் விலக பரிகார பூஜை

தோ‌ஷங்கள் விலக பரிகார பூஜை
காளஹஸ்தி கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது.
காளஹஸ்தி கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோ‌ஷம், சர்ப்ப தோ‌ஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகால பிரச்சினையில் சிக்கி தவிப்பவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது, சர்ப்பதோ‌ஷ நிவாரண பூஜை செய்து கொண்டால் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.


இந்த ஆலயத்தில் தினமும் காலை 7.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதற்காக கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் அனுமதிச் சீட்டு விற்பனை செய்கிறார்கள். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படும். இதில் ஒரு அனுமதிச் சீட்டு வாங்கினாலே போதுமானது. பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தையும் கோவில் நிர்வாகமே வழங்கிவிடும். ஒரு அனுமதிச் சீட்டுக்கு 2 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வேளை பூஜையின் போது 200 பேர் வரை கலந்து கொள்ளலாம். 45 நிமிடம் இந்த பூஜை நடைபெறும்.