மகத்தான மகம்


மகத்தான மகம்
x
தினத்தந்தி 9 Feb 2017 9:30 PM GMT (Updated: 9 Feb 2017 10:12 AM GMT)

எல்லா மாதங்களிலும் ‘மகம்’ நட்சத்திரம் வந்தாணீலும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே சிறப்புக்குரியதாக திகழ்கிறது.

ல்லா மாதங்களிலும் ‘மகம்’ நட்சத்திரம் வந்தாணீலும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் சொல்கின்றன. உலகத்தைப் படைப்பதற்காக, உலகப் பொருட்கள் அனைத்தையும் ஒரு கும்பத்தில் வைத்தனர். அது நீரில் மிதந்து வரும் பொழுது, கும்பத்தை இறைவன் அம்பால் எய்ய அதன் மூக்குப் பகுதி, அதாவது முன்னால் இருக்கும் கூம்பு போன்ற கோணப் பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடமே ‘கும்பகோணம்’ என்ற திருத்தலமாகப் பெயர் பெற்றது.

அங்கு ‘மகாமக’ விழா சிறப்பாக நடை பெறும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற வருடங்களில் வரும் மாசி மாதங்களில் ‘மகம்’ நட்சத்திரம் வரும் பொழுது, நாம் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும்.

இது முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகவும் கருதப்படுகிறது. அன்றைய தினம் தம்பதிகள் விரதமிருந்து, அன்னதானம் செய்தால் சிறப்புக்குரிய வாரிசுகள் உருவாவார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மாசி மகம், இந்த ஆண்டு மார்ச் 11–ந் தேதி (சனிக் கிழமை) வருகிறது. அன்றைய தினம் சிவனை வழிபடுவதன் மூலம் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.

Next Story