ஆன்மிகம்

வாரம் ஒரு அதிசயம் + "||" + A miracle of the week

வாரம் ஒரு அதிசயம்

வாரம் ஒரு அதிசயம்
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலில் இருந்து ஏராளமான பொருட்கள் வெளிப்பட்டன.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலில் இருந்து ஏராளமான பொருட்கள் வெளிப்பட்டன. அப்படித்தான் ஆலகால வி‌ஷமும் கடலில் இருந்து வெளிப்பட்டது. அந்த நஞ்சின் வீரியத்தைத் தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். கடலில் இருந்த உயிர்களும் கூட இறந்து போகும் நிலை உண்டானது. எனவே அனைவரும் சிவபெருமானை வேண்டினர். இதையடுத்து சிவபெருமான், அந்த ஆலகால வி‌ஷத்தை, ஒரு பாத்திரத்தில் திரட்டி உட்கொண்டார். வி‌ஷம் ஈசனின் உடலில் பரவிவிடாமல் தடுப்பதற்காக, பார்வதிதேவியானவள் சிவபெருமானின் கழுத்தை தன் கைகளால் பிடித்துக் கொண்டாள். எனவே வி‌ஷம் சிவபெருமானின் தொண்டையிலேயே நின்று கொண்டது. இதன் காரணமாகவே சிவபெருமான் ‘நீலகண்டர்’ என்று அழைக்கப்பட்டார். இந்த ஆலகால வி‌ஷத்தை உண்ட சிவபெருமான், அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய, அதிசய காட்சியை காசியில் உள்ள அனுமன்காட் என்ற இடத்தில் வீற்றிருக்கும் காமகோடீஸ்வரர் கோவிலில் காணலாம். இதே போன்ற காட்சியை ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் காணமுடியும்.
தொடர்புடைய செய்திகள்

1. புராண கதாபாத்திரங்கள்
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம்.
2. இழந்த பதவியை மீட்டுத் தரும் ஆட்சீஸ்வரர்
சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
3. சரயூ நதி
சனாதன் தர்மம் என்பது தனி மனித ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அது மீறப்படும் போதெல்லாம் பகவான் அவதாரம் செய்கிறார்.
4. வெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய வாசீஸ்வரர்
சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன்.
5. கோபத்தை குறைக்கும் ஐராவதேஸ்வரர்
பெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர்.