ஆன்மிகம்

சங்கிலியால் கட்டப்பட்ட பெருமாள் + "||" + The chain built by the Lord

சங்கிலியால் கட்டப்பட்ட பெருமாள்

சங்கிலியால் கட்டப்பட்ட பெருமாள்
ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ‘சேதுராமர்’ என்ற பெயரில் ஒரு பெருமாள் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் அருள் பாலிக்கும் பெருமாளுக்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ‘சேதுராமர்’ என்ற பெயரில் ஒரு பெருமாள் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் அருள் பாலிக்கும் பெருமாளுக்கு ஒரு கதை கூறப்படுகிறது.

சுந்தரபாண்டியன் என்ற மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. பெருமாளின் தீவிர பக்தனான அந்த மன்னன், தன் குறையை எண்ணி தினமும் பெருமாளை வழிபட்டு வந்தான். இதனால் தன் மனைவி மகாலட்சுமியையே, மன்னனின் மகளாக பிறக்கச் செய்தார் பெருமாள். பின்னர் அவள் வளர்ந்து மணப் பருவம் அடைந்த வேளையில், பெருமாள் ஒரு இளைஞனின் வடிவம் கொண்டு மன்னனின் மகளிடம் வம்பு செய்தார். இதையறிந்த மன்னன், இளைஞன் உருவில் இருந்த பெருமாளை சிறையில் அடைத்ததுடன், சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான்.

அன்றைய தினம் மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், ‘இளைஞன் உருவில் வந்தது நானே’ என்ற உண்மையை உணர்த்தினார். இதையடுத்து சிறையில் இருந்த பெருமாளை விடுவித்து, தனது மகளை மணம் முடித்துக் கொடுத்தார்.

இளைஞராக வந்த பெருமாளே இத்தலத்தில் ‘சேதுராமர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னிதி முன்பு, கடல் மணலில் சிவலிங்கம் செய்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னிதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கணபதியின் தோஷம் போக்கிய கணபதீஸ்வரர்
மரகத முனிவரின் மனைவி விபுதை, அசுர குலத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு அசுர குணம் கொண்ட கஜமுகாசூரன் பிறந்தான்.
2. இந்த வார விசேஷங்கள் : 11-9-2018 முதல் 17-9-2018 வரை
11-ந் தேதி (செவ்வாய்)தேரெழுந்தூர், தேவகோட்டை, மிலட்டூர், திண்டுக்கல், திருவலஞ்சுழி, உப்பூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.
3. விநாயகரின் 16 வடிவங்கள்
பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.
4. பொன்மொழி
நான் கூறும் ‘தேடல்’ என்பது நேர்வழி. மற்ற தியானங்களை விடச் சிறந்தது.
5. கேட்ட வரம் அருளும் வழித்துணை பாபா
மதங்களைக் கடந்து பலரும் வழிபடும் தெய்வமாக இருக்கிறார், சீரடி சாயிபாபா.