இந்த வார விசே‌ஷங்கள் 14–2–2017 முதல் 20–2–2017 வரை


இந்த வார விசே‌ஷங்கள் 14–2–2017 முதல் 20–2–2017 வரை
x
தினத்தந்தி 14 Feb 2017 1:30 AM GMT (Updated: 13 Feb 2017 10:19 AM GMT)

14–ந் தேதி (செவ்வாய்) சங்கடஹர சதுர்த்தி. கோயம்புத்தூர் கோணியம்மன் பூச்சாற்று விழா. திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.

  14–ந் தேதி (செவ்வாய்)

    சங்கடஹர சதுர்த்தி.

    கோயம்புத்தூர் கோணியம்மன் பூச்சாற்று விழா.

    திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.

    கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு.

    மேல்நோக்கு நாள்.

15–ந் தேதி (புதன்)

    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ரத உற்சவம்.

    திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.

    சமநோக்கு நாள்.

16–ந் தேதி (வியாழன்)

    முகூர்த்த நாள்.

    சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி வரும் காட்சி.

    சமநோக்கு நாள்.

17–ந் தேதி (வெள்ளி)

    முகூர்த்த நாள்.

    ராமநாதபுரம் அன்னை முத்தாலம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.

    ராமேஸ்வரம் ராமநாதர் பிரம்மோற்சவம், இரவில் தங்க நந்தி வாகனத்தில் சுவாமியும்,அம்மன் வெள்ளி அம்ச வாகனத்திலும் திருவீதி உலா.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.

    கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    சமநோக்கு நாள்.

18–ந் தேதி (சனி)

    ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருவீதி உலா.

    குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை.

    கீழ்நோக்கு நாள்.

19–ந் தேதி (ஞாயிறு)

    திருகோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங் களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.

    ராமேஸ்வரம் ராமநாதர் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கிளி வாகனத்திலும் திருவீதி உலா.

    இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.

    சமநோக்கு நாள்.

20–ந் தேதி (திங்கள்)

    திருவைகாவூர் சிவபெருமான் பவனி வரும் காட்சி.

    ராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கயிலாய வாகனத்திலும், அம்மன் தங்க சிம்ம வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    சமநோக்கு நாள்.

Next Story