ஆன்மிகம்

22 தீர்த்தங்கள் + "||" + 22 Thirthas

22 தீர்த்தங்கள்

22  தீர்த்தங்கள்
ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தை விடவும், அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதுதான் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தை விடவும், அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதுதான் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக கூறப்படு      கிறது. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாக அமைந்தவை. அக்னி தீர்த்தம் என்று கூறப்    படும் ராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் தான் தீர்த்தமாடு    வதைத் தொடங்க வேண்டும். பின்னர் ஆலயத்தில் உள்ள   மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.


கோவிலுக்குள் உள்ள தீர்த்தங்கள் விவரம் வருமாறு. மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேதுமாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம்.

அக்னி தீர்த்தம்

ராமேஸ்வரம் கடல் ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்  படுகிறது. சீதாதேவியின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்ய வைத்தார் ராமர். அப்போது சீதையின் கற்புத் திறன், அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி பகவான், இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தைத் தணித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது. மேலும் சீதையை தொட்ட தோ‌ஷம் நீங்குவதற்காகவும், அக்னி பகவான் இந்தக் கடலில் நீராடியதாக புராணம் தெரிவிக்கிறது. அக்னி தீர்த்தத்தில் நீராட, கடலில் இடம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

தீர்த்தங்களும்.. பலன்களும்..

மகாலட்சுமி தீர்த்தம்    –     செல்வ வளம் பெருகும்.

சாவித்திரி தீர்த்தம்     –     பேச்சுத் திறன் வளரும்.

காயத்ரி தீர்த்தம்     –     உலக நன்மை உண்டாகும்.

சரஸ்வதி தீர்த்தம்     –     கல்வியில் உயர்வு தரும்.

சங்கு தீர்த்தம்     –     வசதியாக வாழ்வு அமையும்.

சக்கர தீர்த்தம்     –     மன உறுதி கிடைக்கும்.

சேதுமாதவ தீர்த்தம்     –     தடைபட்ட பணிகள் தொடரும்.

நள தீர்த்தம்     –     தடைகள் அகலும்.

நீல தீர்த்தம்     –     எதிரிகள் விலகுவர்.

கவய தீர்த்தம்     –     பகை மறையும்.

கவாட்ச தீர்த்தம்     –     கவலை நீங்கும்.

கந்தமாதன தீர்த்தம்     –     எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம்.

பிரம்மஹத்தி தீர்த்தம்     –     பிரம்மஹத்தி தோ‌ஷம் நீங்கும்.

கங்கா தீர்த்தம்     –     பாவங்கள் அகலும்.

யமுனை தீர்த்தம்     –     பதவி வந்து சேரும்.

கயா தீர்த்தம்     –     முன்னோர் ஆசி கிடைக்கும்.

சர்வ தீர்த்தம்     –     முன்பிறவி பாவம் விலகும்.

சிவ தீர்த்தம்     –     சகல பிணிகளும் நீங்கும்.

சத்யாமிர்த தீர்த்தம்     –     ஆயுள் விருத்தியாகும்.

சந்திர தீர்த்தம்     –     கலை ஆர்வம் பெருகும்.

சூரிய தீர்த்தம்     –     முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.

கோடி தீர்த்தம்     –     முக்தி அடையலாம்.

பாதாள  பைரவர்

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமபிரான் சிவலிங்க பூஜை செய்தபோது, அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோ‌ஷம்   விலகியது. ஆனால் அந்த தோ‌ஷம் எங்கு செல்வதென்று தெரியாமல் திணறியது. அந்த தோ‌ஷத்தால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருப்பதற்காக, சிவபெருமான் தனது வடிவங்களில் ஒருவரான பைரவரை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தி தோ‌ஷத்தை தன்னுடைய பாதத்தில் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இந்த ஆலயத்திலேயே தங்கிய பைரவர், தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவங்களை, பாதாளத்திற்கு தள்ளி அருள்பாலித்து வரு     கிறார். எனவே இவருக்கு ‘பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னிதிக்கு அருகில் தான் கோடி தீர்த்தம் உள்ளது.

இரண்டு  விநாயகர்

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்பாள் சன்னிதியின் பிரகாரத்தில் இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். இவர்களுக்கு சந்ததான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என்று பெயர். இவர்கள் இருவரும் காவி உடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விநாயகப்பெருமான் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு காவி உடை அணிவிக்கப்படுவதாக காரண காரியம் கூறப்  படுகிறது. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள், குழந்தை வரம் கிடைக்கவும், செல்வ வளம் பெருகவும் இந்த இரட்டை விநாயகர்களை வேண்டிக்கொள்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்?
திருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.
2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...
ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.
3. தீபத்தில் முப்பெரும்தேவியர்
முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.
4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்
மகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.
5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ
சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.