ஆன்மிகம்

விடிவு காலம் பிறக்க விளக்கேற்றுங்கள் + "||" + Born dawn period Light a lamp

விடிவு காலம் பிறக்க விளக்கேற்றுங்கள்

விடிவு காலம் பிறக்க விளக்கேற்றுங்கள்
* சித்திரை மாத பவுர்ணமியன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தன தான்யம் பெருகும்.
* வைகாசி மாத பவுர்ணமியில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வ நிலை உயரும்.

* ஆனி மாத பவுர்ணமிப் பொழுதில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் விவாகப் பேச்சுகள் முடிவாகும்.

* ஆடி மாத பவுர்ணமியன்று, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.

* ஆவணி மாத பவுர்ணமியில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால்  புத்திர பாக்கியம் கிடைக்கும்.

* புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் நடைபெறும்.

* ஐப்பசி மாத பவுர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் உணவு பஞ்சம் ஏற்படாது.

* கார்த்திகை மாத பவுர்ணமி பொழுதில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் நிலைத்த புகழ் வந்து சேரும்.

* மார்கழி மாத பவுர்ணமியன்று, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியமான உடல்நிலை உருவாகும்.

* தை மாத பவுர்ணமி தினத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

* மாசி மாத பவுர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அகன்று இன்பங்கள் பெருகும்.

* பங்குனி மாத பவுர்ணமி அன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.