நாள் முழுவதும் சிறப்பு பூஜை
பஞ்சபூத தலங்களில் ஒன்றாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறது தேவிகாபுரம் என்ற ஊர்.
பஞ்சபூத தலங்களில் ஒன்றாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறது தேவிகாபுரம் என்ற ஊர். இந்த ஊரில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் உள்ள சிறிய மலைக் குன்றில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் கனககிரீஸ்வரர். இவருக்கு தினமும் வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுவது விசேஷமான ஒன்றாகும். ஒரு முறை பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து, இந்த இடத்தில் தவம் இருந்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது. அம்மனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், சுயம்பு லிங்கமாக தோன்றி காட்சியளித்ததும், தனது இடபக்கத்தில் அம்மனை இணைத்துக் கொண்டாராம். அந்த நாளே சிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகிறது. எனவே மகா சிவராத்திரி அன்று மட்டும், இந்த ஆலயத்தில் நாள் முழுவதும் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. மற்ற நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பூஜை நடைபெறும்.
Next Story