குரங்கு பெற்ற அரச வாழ்வு


குரங்கு பெற்ற அரச வாழ்வு
x
தினத்தந்தி 21 Feb 2017 9:46 AM GMT (Updated: 21 Feb 2017 9:46 AM GMT)

ஒரு சிவராத்திரியன்று வில்வ மரத்தடியில் சிவனும், பார்வதியும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

ரு சிவராத்திரியன்று வில்வ மரத்தடியில் சிவனும், பார்வதியும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அதை மரத்தில் இருந்த ஒரு குரங்கு தூங்காமல் கேட்டுக் கொண்டு இருந்தது. தூக்கம் வராத குரங்கு வில்வ இலைகளை பறித்து சிவன் மேலும், பார்வதி மேலும் வீசிய படியே இருந்தது. சிவராத்திரியில் 4 காலங்களிலும் தூங்காமல் குரங்கு வீசிய வில்வ இலைகளை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். அந்த குரங்கிற்கு மகா சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைத்தது. அடுத்த பிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார். உடனே அந்த குரங்கு தான் பெற்ற பாக்கியத்தை உலகம் அறியும் பொருட்டு முசுகுந்த மன்னனாக தான் வாழும் காலத்தில் குரங்கு முகத்துடன் பிறக்க வேண்டும் என வரம் கேட்டது. சிவனும் அப்படியே ஆகட்டும் என வரம் அளித்தார். அதன்படியே  சோழ மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தியாக குரங்கு முகத்துடன் பிறந்து மூவுலகிலும் ஆட்சி செய்தார்.

Next Story