ஆவரண ஆலயங்கள்


ஆவரண ஆலயங்கள்
x
தினத்தந்தி 23 Feb 2017 9:15 PM GMT (Updated: 22 Feb 2017 9:23 AM GMT)

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியே, மதுரை நகருக்குள் நான்கு திசைகளிலும் உள்ள கோவில்கள் உள் ஆவரணம் என்று அழைக்கப்படுகிறது.

துரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியே, மதுரை நகருக்குள் நான்கு திசைகளிலும் உள்ள கோவில்கள் உள் ஆவரணம் என்று அழைக்கப்படுகிறது. இதே போல் மதுரை நகருக்கு வெளியேயும் நான்கு திசைகளிலும் நான்கு ஆலயங்கள் உள்ளன. இவை வெளி ஆவரணங்கள் என்று புகழப்படுகின்றன.

மதுரை நகருக்கு வெளியே தெற்கில் திருப்பரங்குன்றம், மேற்கில் திருவேடகம், வடக்கில் திருவாப்பனூர், கிழக்கில் திருப்புவனம் ஆகிய திருக்கோவில்களில் அமைந்துள்ளன. இவையே வெளி ஆவரணம் என்று கூறப்படுகிறது.

இதே போல் மதுரை நகருக்குள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோவில், மேற்கு திசையில் சிவபெருமானே தன்னை அர்ச்சித்துக் கொண்ட இம்மையில் நன்மை தருவார் கோவில், கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ஐராவத நல்லூர் முக்தீஸ்வரர் கோவில், தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய்க் கோவில்    ஆகியவை உள்ளது. இவை உள்  ஆவரணக் கோவில்களாகும்.

Next Story