ஆன்மிகம்

51. சக்தி பீடங்கள் + "||" + Energy Faculties

51. சக்தி பீடங்கள்

51.  சக்தி பீடங்கள்
தேவி பாகவதம் என்ற நூல், அம்பாளுக்கு 108 சக்தி பீடங்கள் இருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் தந்திர சூடாமணி என்ற நூலில் 51 சக்தி பீடங்கள் என்று தெளிவாக இருக்கின்றன.
தேவி பாகவதம் என்ற நூல், அம்பாளுக்கு 108 சக்தி பீடங்கள் இருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் தந்திர சூடாமணி என்ற நூலில் 51 சக்தி பீடங்கள் என்று தெளிவாக இருக்கின்றன. இந்த நூலை பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாளின் 51 உடல் பாகங்கள் விழுந்த இடமே சக்தி பீடங்களாக உருவானதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.


அந்த சக்தி பீடங்களையும், அவை அமைந்த இடங் களையும் வரிசையாகப் பார்க்கலாம்.

    கொல்லூர் மூகாம்பிகை (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா.

    காஞ்சி காமாட்சி (காமகோடி பீடம்), தமிழ்நாடு.

    மதுரை மீனாட்சி (மந்திரிணி பீடம்), தமிழ்நாடு.

    காசி விசாலாட்சி (மணிகர்ணிகா பீடம்), உத்தரபிரதேசம்.

    மகாகாளம் சங்கரி (மகோத்பலா பீடம்), மத்திய பிரதேசம்.

    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி (சேது பீடம்), தமிழ்நாடு.

    திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி (ஞானபீடம்), தமிழ்நாடு.

    திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள் (அருணை பீடம்), தமிழ்நாடு.

    திருவாரூர் கமலாம்பாள் (கமலை பீடம்), தமிழ்நாடு.

    கன்னியாகுமரி பகவதி (குமரி பீடம்), தமிழ்நாடு.

    உஜ்ஜையினி மகாகாளி (ருத்ராணி பீடம்), மத்திய பிரதேசம்.

    கும்பகோணம் மங்களாம்பிகை (விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு.

    ஜம்மு வைஷ்ணவி (வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்.

    விந்தியாசலம் நந்தாதேவி (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்.

    ஸ்ரீசைலம் பிரம்மராம்பாள் (சைல பீடம்), ஆந்திரா.

    ருத்ரகோடி மார்க்கதாயினி (ருத்ரசக்தி பீடம்), இமாசலப்பிரதேசம்.

    காளகஸ்தி ஞானாம்பிகை (ஞான பீடம்), ஆந்திரா.

    கவுகாத்தி காமாக்யா (காமகிரி பீடம்) அசாம்.

    ஸ்ரீநகர் சம்புநாதேஸ்வரி (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்.

    திருக்கடையூர் அபிராமி (கால பீடம்), தமிழ்நாடு.

    கொடுங்கலூர் பகவதி (மகாசக்தி பீடம்), கேரளா.

    கோலாப்பூர் மகாலட்சுமி  (கரவீரபீடம்) மகாராஷ்டிரா.

    குருஷேத்திரம் ஸ்தாணுபிரியை (உபதேச பீடம்) அரியானா.

    திருவாலங்காடு மகாகாளி (காளி பீடம்) தமிழ்நாடு.

    கொல்கத்தா பிரதான காளி (உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்.

    பூரி பைரவி (பைரவி பீடம்) ஒடிசா.

    திராட்சவரமா மாணிக்காம்பாள் (மாணிக்க பீடம்) ஆந்திரா.

    துவாரகை பத்ரகாளி (சக்தி பீடம்) குஜராத்.

    திருக்குற்றாலம் பராசக்தி (பராசக்தி பீடம்), தமிழ்நாடு.

    அஸ்தினாபுரம் முக்திநாயகி (ஜெயந்தி பீடம்) அரியானா.

    குளித்தலை லலிதா (சாயா பீடம்) தமிழ்நாடு.

    புஷ்கரம் காயத்ரி (காயத்ரி பீடம்) ராஜஸ்தான்.

    சோமநாதம் சந்திரபாகா (பிரபாஸா பீடம்) குஜராத்.

    பாசநாசம் உலகநாயகி (விமலை பீடம்), தமிழ்நாடு.

    திருநெல்வேலி காந்திமதி (காந்தி பீடம்), தமிழ்நாடு.

     திருவெண்காடு பிரம்மவித்யா (பிரணவ பீடம்), தமிழ்நாடு.

    திருவையாறு தர்மசம்வர்த்தினி (தர்ம பீடம்), தமிழ்நாடு.

    திருவொற்றியூர் திரிபுரசுந்தரி (இஷீபீடம்), தமிழ்நாடு.

    தேவிபட்டினம் மகி‌ஷமர்த்தினி (வீரசக்தி பீடம்), தமிழ்நாடு.

    நாகுலம் நாகுலேஸ்வரி (உட்டியாணபீடம்) இமாசலப்பிரதேசம்.

    ஜலாந்திரம் திரிபுரமாலினி (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்.

    திரியம்பகம் திரியம்பகதேவி (திரிகோணபீடம்) மகாராஷ்டிரா.

    மைசூர் சாமுண்டீஸ்வரி (சம்பப்பிரத பீடம்) கர்நாடகா.

    பிரயாகை ஸ்ரீலலிதா (பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்.

    சிம்லா நீலாம்பிகை (சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்.

    துளஜாபுரம் பவானி (உத்பலா பீடம்) மகாராஷ்டிரா.

    பசுபதி காட்மாண்ட் பவானி (சக்தி பீடம்) நேபாளம்.

    கயை மந்த்ரிணி (திரிவேணி பீடம்) பீகார்.

    கோகர்ணம் பத்ரகர்ணி (கர்ண பீடம்) கர்நாடகா.

    ஹஜ்பூர் விரஜை ஸ்தம்பேஸ்வரி (விரஜா பீடம்) உ.பி.

    மானசரோவர் தாட்சாயிணி (தியாக பீடம்) திபெத்.


தொடர்புடைய செய்திகள்

1. சுதக்‌ஷனை - புதிய தொடர்
ராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.
2. நவராத்திரியும்..நைவேத்தியமும்..
முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.
3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்
‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.
4. முப்பெருந்தேவிகளின் சிறப்புகள்
புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.
5. குரு பார்க்க கோடி நன்மை
நவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.