திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது


திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது
x
தினத்தந்தி 7 March 2017 3:45 AM IST (Updated: 7 March 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் மண்டல பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீரங்கம்,

இதையொட்டி நேற்று காலை சுவாமி, அம்பாள், விநாயகர், சோமாஸ் கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடிமரம் அருகே வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து வருகிற 23–ந் தேதி எட்டு திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்றிரவு சோமாஸ் கந்தர் புறப்பாடு நடக்கிறது. 2–ம் நாள் சுவாமி, அம்பாள் சூரியபிறை, சந்திரபிறை வாகனத்தில் வீதி உலாவும் வருகின்றனர். 3–ம் நாள் காலை பூத வாகனம், மாலை காமதேனு வாகனத்திலும், 4–ந் தேதி காலை கைலாச வாகனத்திலும், மாலை கிளி வாகனத்திலும், 5–ம் நாள் ரி‌ஷப வாகனத்திலும் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28–ந் தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது. ஏப்ரல் 13–ந் தேதி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

1 More update

Next Story