ஆன்மிகம்

தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து + "||" + Changing fate Handwriting

தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து

தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து
நாம் ஜோதிடம், கைரேகை, எண்கணிதம் என எதிர் காலம் குறித்து சொல்லக்கூடிய விஷயங்களைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.
ஆனால் ஒருவர் எழுதும் கையெழுத்தை வைத்தும் கூட அவரது வாழ்க்கை முறையை, எதிர் காலத்தை துல்லியமாக அறிய முடியும் என்பதை மிகச் சிலரே தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒருவர் தனது கையெழுத்தின் மூலம் தனது செல்வாக்கான வாழ்க்கையை இழந்திருக்கிறார் என்பதும் உண்மை. அதுபோல ஒருவர் தனது கையெழுத்தின் மூலம் செல்வந்தர் ஆகியிருக் கிறார் என்பதும் உண்மை.


இந்த கலைக்கு ஆங்கிலத்தில் ‘கிராபாலஜி’  (Graphology) என்று பெயர். இந்த கையெழுத்து ஆராய்ச்சிக் கலை, பேப்பர் கண்டறியப்பட்ட காலத்திலேயே பிரபல மானது. கி.பி. 1782-ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் அன்னா கோரன் என்ற பெண்மணி, இந்தக் கையெழுத்து ஆராய்ச்சிக் கலை பற்றிய ஒரு நிறுவனத்தை நிறுவினார். இன்றும் அந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
உண்மையில் நாம் நமது கையினால் எழுதுவதால் அதன் பெயர் கையெழுத்து என்றாகிறது. ஆனால் அந்த கையெழுத்து, ஒவ்வொருவரின் மூளை இடும் கட்டளைப்படிதான் அமைகிறது என்கிறது விஞ்ஞானம். இந்தக் கையெழுத்து இப்படித்தான் அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஒவ்வொருவரின் மூளைதான். அதற்கு ஏற்ற வகையில்தான் கை செயல்படுகிறது.
ஒருவர் தங்களது கையெழுத்தை எந்த மொழியில் எழுதினாலும், அந்த எழுத்துகளின் வடிவங்களை வைத்து, அந்த நபரின் இயல்பான குணாதிசயங்களையும், அவரது எதிர்காலத்தையும் வெகு துல்லியமாக கண்டறிய முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள நிலைகளுக்குள் தான் ஒருவரது கையெழுத்து இருக்கும். இவ்வாறு அவர்கள் எழுதும் நிலையை வைத்தே ஒருவரின் தலையெழுத்தை கூறிவிடுவதே இந்தக் கலையின் சிறப்பம்சம். ஒருவரது கையெழுத்து சரியில்லை என்றால், அதை மாற்றி அமைத்து, சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும் இங்கு வழி இருக்கிறது.

பொதுவாக அரிசாண்டில் (Horizantal)  என்ற நிலையில் தங்களது கையெழுத்தை தெளிவற்ற நிலையில் வரைந்தால், அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை மேற்கொள்வார்கள். இதே பலன் 15 டிகிரி என்ற நிலையில் எழுதுபவர்களுக்கும் உண்டு. இந்த பலன், ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். கையெழுத்தை 30 டிகிரி கோணத்தில் எழுதுபவர்கள் பெண் பாலராக இருப்பின், அவர்கள் புகழ்பெற்ற வாழ்க்கையை அடைவார்கள். ஆனால் ஆண்களுக்கு அது துன்பங்களைத்தான் கொடுக்கும். அதே நேரத்தில் 45 டிகிரி கோணத்தில் பெயர் தெரியும்படி கையெழுத்திடும் நபர்களுக்கு, அவர்களின் வாழ்வு சிறப்பானதாக அமையும்.

கையெழுத்திடும் ஒருசிலர், அதன் கீழே நீளமான அடிக்கோடு வரைவார்கள். அது அவ்வளவு நல்லதல்ல. இதை அறவே தவிர்ப்பதுதான் நல்லது. வேண்டுமானால் 1 செ.மீட்டருக்கும் குறைவான அடிக்கோட்டை வரையலாம்.
ஆண்களைப் பொறுத்தவரை, பள்ளி மற்றும் கல்லூரி காலங் களில் தங்களது கையெழுத்தை மாற்றி, மாற்றி எழுதிப் பார்ப்பார்கள். ஆனால் வேலை தேடும் பருவம் வந்ததும் ஒரே மாதிரியான கையெழுத்து போடுவதை இயல்பாக மாற்றிக்கொள்வார்கள். ஆனால் 90 சதவீத பெண்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் தங்களது கையெழுத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வித முயற்சியும் எடுப்பதில்லை.

கையெழுத்திற்கும் ஒருவித சக்தி உண்டு. பலன் உண்டு. அதனை உணர்ந்து அதற்கேற்றாற்போல் நமது கையெழுத்தை மாற்றி அமைத்துக்கொண்டால், நமது தலையெழுத்தும் நல்ல விதமாக அமையும்.

பதினாறு பேறும் பெற!

அட்சதை - இலையில் அரிசி விழுந்தால் சோறு
தலையில் அரிசி விழுந்தால் அட்சதை

மணமக்களை வாழ்த்தும் பொழுது, சகலபாக்கியமும் பெற்று வாழ்க!
வள்ளுவமும் வாசுகியும் போல வாழ்க!
கதிரும் மதியும் போல வாழ்க!

பதினாறு பேறுகளும் பெற்று வாழ்க! என்று வாழ்த்துவார்கள்.

அந்தப் பதினாறு வகையான பேறுகள் எவை தெரியுமா?

புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி, நன்மக்கள், பொன், நெல், அழகு, பெருமை, ஆயுள், நல்லாள், இளமை, அறிவு, துணிவு, நோயின்மை, நுகர்ச்சி.