கைரேகை அற்புதங்கள் திருமணத் தடை ஏற்படுவது ஏன்?
குல தர்மத்தைக் காப்பாற்றவும், வம்ச விருத்தி உண்டாகவும், வயதான காலத்தில் தன் பெற்றோரை கவனித்துக் கொள்ளவும், தவறான பாதைக்கு தன் பிள்ளைகள் போகாமல் இருக்கவும் ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் கட்டாயம் தேவைப்படுகிறது.
ஒரு ஆண் எப்போதும் பிரம்மசாரியாகவோ, ஒரு பெண் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவோ இந்த பூமியில் வாழ முடியாது. அப்படி வாழலாம் என்று நினைத்தால் அவர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார் என்று அர்த்தம். இரண்டு வித திருமணங்கள் நம் நாட்டில் நடக்கிறது. ஒன்று பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணம். மற்றொன்று பெற்றோர் அனுமதியின்றி செய்யும் திருமணம்.
ஒரு ஆண் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7-ம் பாலம் திருமணத்தைக் குறிக்கும் வீடு. பெண் ஜாதகத்தில் 8-ம் வீடு மாங்கல்ய ஸ்தானம். ஆண் ஜாதகத்தில் 2,7 ஆகிய இடங்களில் செவ்வாய், ராகு, கேது, சனி இருந்தால் தார தோஷம் உண்டாகிறது. பெண் ஜாதகத்தில் 7-ல் ராகு அல்லது கேது இருந்தால் திருமண தடை ஏற்படும். 7-ல் ராகுவுடன் சனி சேர்ந்து இருந்தால் திருமணம் தாமதமாகும். குடும்ப ஸ்தானத்தை சனி, செவ்வாய் பார்த்தாலும் திருமணம் தாமதமாகக்கூடும். 7-ம் வீட்டுக்குரிய கிரகம் 6,8,12-ல் மறைந்து இருப்பது நல்லதல்ல. 7-ம் வீட்டு அதிபதியான சுக்ரன், சனி பார்வை திருமண பாதிப்பை உண்டாக்கும். 7-ம் வீட்டில் உள்ள கிரகம் நீச்சம் அடைந்த நீச்ச பங்கம் பெறாமல் இருப்பது மிக தாமதமான திருமணத்தை ஏற்படுத்தும். இன்னும் நிறைய காரணங்கள் உள்ளன.
ஒரு பெண் ஜாதகத்தில் 2-ம் வீடு குடும்ப வாழ்க்கையையும், 8-ம் வீடு ஆயுளையும், மாங்கல்யத்தையும், 4-ம் வீடு அவளது நடத்தையையும், 5-ம் வீடு புத்திர பாக்கியத்தையும் குறிக்கின்றன. மேற்கூறிய காரணங்களால் திருமணம் தடைபட்டால், உரிய பரிகாரங்கள் செய்து தடையை விலக்கலாம்.
இனி கைரேகைப்படி திரு மணத்தடை யாருக்கு என்பதைப் பார்க்கலாம்.
புதன் விரலுக்கு, அதாவது சுண்டு விரலுக்கு அடியில், பக்கவாட்டில் அமைந்த ரேகையே திருமண ரேகை ஆகும். திருமண ரேகையில் தீவுக்குறி அமைய, திருமண தடங்கல் நிச்சயம். திருமண ரேகை பிளவுபடக் கூடாது. அப்படி இருந்தால் திருமணத்திற்குப் பின் பிரிய நேரிடும். திருமண ரேகை, இருதய ரேகையை வெட்டினால், மண வாழ்வில் பிரச்சினை உண்டாகும். ஆணின் கையில் அமைந்துள்ள புதன் விரல் ரேகை, 2-வது அங்கலாஸ்த்தி வரை திருமண ரேகை நீண்டிருந்தால் அந்த நபருக்கு திருமணம் கிடையாது. திருமண ரேகையில் நிரந்த கறுப்பு மச்சம் இருந்தாலும், அந்த நபருக்கு திருமணம் நடக்க சாத்தியம் இல்லை.

Next Story