வாரம் ஒரு அதிசயம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ளது திரியம்பகம் என்ற திருத்தலம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ளது திரியம்பகம் என்ற திருத்தலம். இங்கு 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான திரியம்பகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. சுயம்பு லிங்கமாக இருந்து அருள் புரியும் திரியம்பகேஸ்வரரின் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது என்பது அதிசயமான ஒரு நிகழ்வாகும். இந்தத் திருத்தலத்தில் உள்ள பிரம்மகிரியில் இருந்துதான் கோதாவரி நதி உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் ஜடேஸ்வரி என்பதாகும்.
Next Story