ஆன்மிகத் துளிகள்


ஆன்மிகத் துளிகள்
x
தினத்தந்தி 28 March 2017 6:30 AM IST (Updated: 27 March 2017 5:03 PM IST)
t-max-icont-min-icon

ஒருவன் தனக்காக ஆயிரக் கணக்கில்செலவழிப்பான். ஆனால் உண்ண உணவில்லாமல் அவதிப்படும் அவனது அண்டை வீட்டானை பற்றி கவலைப்பட மாட்டான்.

இறைவன்

ஒருவன் தனக்காக ஆயிரக் கணக்கில்செலவழிப்பான். ஆனால் உண்ண உணவில்லாமல் அவதிப்படும் அவனது அண்டை வீட்டானை பற்றி கவலைப்பட மாட்டான். கேட்டால், ‘நான் என்ன செய்யட்டும். அவனவன் விதிப்படி நடக்கிறது’ என்பான். ஆனால் இறைவன் அப்படியல்ல.. நாம் எதை விரும்பினாலும் அதைக் கொடுப்பவன்.

–ஸ்ரீ ராமகிருஷ்ணர்.


விதி

படைப்பவர் எல்லா இடங்களிலும் இருந்து கொண்டு, அவரவர் வினைப்படி வாழ்க்கையை அமைக்கிறார். விதிக்காதது என்ன முயற்சி செய்தாலும் நடக்காது. விதியை வெல்லவோ, அதிலிருந்து விலகி நிற்கவோ இரண்டு வழிகள் உண்டு. ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என்று அறிவது, மற்றொன்று இறைவனை சரணடைவது.

–ரமணர்.

அச்சம்

இவ்வுலகிலோ அல்லது மறு உலகிலோ இழிவுக்கும், பாவத்துக்கும் உறுதியான காரணம் அச்சமே. அதுதான் துயரத்தைத் தரு கிறது. மரணத்தைத் தருகிறது. கேட்டை விளைவிக்கிறது. அச்சத்தை உண்டுபண்ணுவது எனது? நமது உண்மை இயல்பை அறியாததே. நாம் ஒவ்வொருவரும் மன்னருக்கெல்லாம் மன்னரான இறைவனின் வாரிசுகள்.

–விவேகானந்தர்.

Next Story