ஆன்மிகம்

வாரம் ஒரு அதிசயம் + "||" + A miracle of the week

வாரம் ஒரு அதிசயம்

வாரம் ஒரு அதிசயம்
காஞ்சீபுரத்தில் உள்ள பழமையான திருக்கோவில்களில் ஒன்று கயிலாசநாதர் ஆலயம். இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர் ராஜசிம்மன்.
காஞ்சீபுரத்தில் உள்ள பழமையான திருக்கோவில்களில் ஒன்று கயிலாசநாதர் ஆலயம். இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர் ராஜசிம்மன். போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமையைக் கொண்டவன். அதனைச் சுட்டிக்காட்டும் வகையில், இந்த ஆலயத்தில் எங்கு பார்த்தாலும் சிங்கங்கள் தான் கோவிலைத் தாங்கி நிற்பது போன்ற காட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மேலும் இந்த ஆலயத்தில் நாம் காணும் ஒவ்வொரு சிற்பமும், சிவ பராக்கிரமத்தை எடுத்துரைப்பதற்காகவே இருக்கிறது. இது வேறு எந்த ஆலயத்திலும் பார்க்க முடியாத ஒன்று.