ஆன்மிகம்

இல்லறம் நல்லறமாக.. + "||" + Family life with good deeds

இல்லறம் நல்லறமாக..

இல்லறம் நல்லறமாக..
* பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் மூன்றாம் மாதம் முதல், அவர்களது கணவர் கடலில் குளிக்கக் கூடாது.
* குடும்ப உறுப்பினர்கள் வெளியில் புறப்பட்டுச் செல்லும் பொழுது, ‘எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்கக் கூடாது. புறப்படுவதற்கு முன்னதாகவே கேட்டுக் கொள்வது நல்லது.

* குழந்தைகளைப் பார்த்து ‘நீ அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?’ என்று பாரபட்சம் காட்டி பேசக்கூடாது. ‘அந்தக் குழந்தை அப்படியிருக்கிறது. இந்தக் குழந்தை இப்படி இருக்கிறது. நீ ஒன்றுக்கும் லாயக்கில்லை’ என்று பிற குழந்தைகளோடு நம்முடைய குழந்தைகளை ஒப்பிட்டு பேசுவதையும் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும்.


* கணவன்-மனைவியை அழைக்கும் பொழுது, பெயர் சொல்லி அழைக்கலாம். அல்லது ‘அம்மா’ என்றழைக்கலாம். ‘வாடி, போடி’ என்று அழைக்கக்கூடாது. ‘வாடி’ என்றால் வாடுதல், வதங்குதல் என்று பொருள். ‘போடி’ என்றால் செல்வம் போய்விடும்.