ஆன்மிகம்

முருகனுக்குரிய பெயர்க்காரணம் + "||" + Murukanukkuriya peyarkkaranam

முருகனுக்குரிய பெயர்க்காரணம்

முருகனுக்குரிய பெயர்க்காரணம்
சுவாமிநாதன் – தந்தைக்கு உபதேசம் செய்தவன் கார்த்திகேயன் – கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் சேவற்கொடியோன் – சேவலைக் கொடியாகக் கொண்டவன்
சுவாமிநாதன்     –    தந்தைக்கு உபதேசம் செய்தவன்

கார்த்திகேயன்     –    கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்

சேவற்கொடியோன்     –     சேவலைக் கொடியாகக் கொண்டவன்

சரவணபவன்     –     சரவணப் பொய்கையில் தோன்றியவன்

காங்கேயன்     –     கங்கையில் தவழ்ந்தவன்

சுப்ரமணியன்     –     பிரம்மத்தில் உயர்ந்தவன்

சண்முகன்     –     ஆறுமுகம் கொண்டவன்

வேலவன்     –     வேலை கையில் ஏந்தியவன்

மனிதனுக்கு  தேவையான  குணம்

பொறுமையோடு இருப்பது. அடக்கத்தோடு இருப்பது. பற்று இல்லாமல் இருப்பது. நடு நிலையோடு இருப்பது. எதிர்பார்ப்பின்றி இருப்பது. நம்பிக்கையோடு இருப்பது. அமைதியோடும், ஒழுக்கத்தோடும் இருப்பது. நாவடக்கத்தோடு இருப்பது. இவை அனைத்தும் ஒரு மனிதனுக் குரிய சிறப்பு நற்பண்புகளாகும். இந்த எட்டுக் குணங்களும் ஒருவரிடம் இருந்தால், அவர் வெற்றிக்குரிய மனிதராகத் திகழ்வார்.

பூஜைக்கு உகந்த பூ

*    மனோரஞ்சித மலரை வழிபாட்டிற்குப் பயன்படுத்தினால், தம்பதியர்களுக் குள் ஒற்றுமை உண்டாகும்.

*    மனக்கவலை தீரவும், மகிழ்ச்சி அதிகரிக்கவும் வெண்தாமரை மலரை பூஜைகளில் சேர்க்கலாம்.

*    நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலரைப் பயன்படுத்தினால் மன அமைதி கிடைக்கும்.

*    பாரிஜாத மலரைப் பயன்படுத்தினால் ஆயுள் விருத்தியாகும்.

*    வில்வம், துளசி போன்றவற்றைப் பயன்படுத்தினால் வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும்.

*    மரிக்கொழுந்தைப் பயன்படுத்தினால் புகழ் பெருகும்.

சங்கடம்  தரும் சந்திராஷ்டமம்

ஒவ்வொருவருடைய ராசிக்கும் 8–ல் சந்திரன் வரும், இரண்டே கால் நாட்களும் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். அந்த நேரத்தில் பிறருக்கு நீங்கள் நன்மைகள் செய்தாலும் அது தீமையாக முடியும்.

சந்திராஷ்டம நாட்களில் எதிர்பார்த்தது நடைபெறாது. குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். நிம்மதி குறையும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் சிக்கல்கள் வந்து சேரலாம்.

பயணங்களால் தொல்லை உருவாகும். மருத்துவச் செலவு உண்டு. எனவே தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கை தேவை.

உங்கள் ராசிக்கு 8–ல் சந்திரன் உலா வரும் பொழுது, பொறுமை, அமைதி, நிதானம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதோடு ஆலய வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

தெய்வங்கள்  திருப்தி  அடைய..

தேவர்களை     –     ஹோமத்தினால் திருப்தியடையச் செய்யலாம்.

முன்னோர்களை     –     சிரார்த்தத்தினால் திருப்தி அடைய வைக்கலாம்.

தெய்வங்களை     –     தரிசனத்தால் திருப்தியடைச் செய்யலாம்.

பெற்றோர்களை     –     பிரியத்தினால் திருப்தி அடையச் செய்யலாம்.

பிள்ளைகளை     –     பாசத்தினால் திருப்தியடையச் வைக்கலாம்.

மனைவியை     –     நேசிக்கும் அன்பால் திருப்தி அடையச் செய்யலாம்.

முதலாளியை     –     உழைப்பின் மூலம் திருப்திப்படுத்தலாம்.

தொகுப்பு :  சிவல்புரி சிங்காரம்

ஆசிரியரின் தேர்வுகள்...