ஆன்மிகம்

செல்வம் அருளும் அட்சயபுரீஸ்வரர் + "||" + Gives Wealth Atchayapuriswarar

செல்வம் அருளும் அட்சயபுரீஸ்வரர்

செல்வம் அருளும் அட்சயபுரீஸ்வரர்
இங்குள்ள ஈசனை, அட்சய திருதியை அன்று அர்ச்சனை செய்து வழிபட்டால், இழந்த செல்வங்கள் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகே விளாங்குளம் என்ற ஊர் உள்ளது. இங்கு ‘அட்சயபுரீஸ்வரர்’ திருக்கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் திருநாமம் அட்சயபுரீஸ்வரர் என்பதாகும். இங்குள்ள ஈசனை, அட்சய திருதியை அன்று அர்ச்சனை செய்து வழிபட்டால், இழந்த செல்வங்கள் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் குபேரனின் அருளும் கிடைக்கப்பெறும்.

இந்த ஆலயத்தில் மேலும் சிறப்பு சேர்ப்பதாக, சனீஸ்வர பகவான், தனது இரு மனைவியரான நீலாதேவி, சாயாதேவி ஆகியோருடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் குடும்ப ஒற்றுமை பலப்படும். பிரிந்த தம்பதியர் இணைவார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...