ஆன்மிகம்

ஆன்மிகத் துளிகள் + "||" + The spiritual drops

ஆன்மிகத் துளிகள்

ஆன்மிகத் துளிகள்
நீங்கள் இறைவனிடம் சரண் புகுந்து விடுங்கள். அவர் உங்களை சூழ்ந்திருக்கும் துன்ப மேகங்களை விலக்குவார்.
சரண்

நீங்கள் இறைவனிடம் சரண் புகுந்து விடுங்கள். அவர் உங்களை சூழ்ந்திருக்கும் துன்ப மேகங்களை விலக்குவார். இறைவனை மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்க்கையில் சாதகமான காற்று வீசும். இறைவன் உங்கள் குரலைக் கேட்பார். எல்லாவற்றையும் உங்களுக்குச் சாதகமாக செய்து தருவார். உங்கள் வாழ்வில் வெளிச்சம் வரும்.

–ராமகிருஷ்ணர்.

மூச்சு

மூச்சின் ஓட்டத்தை மனதால் உற்று நோக்கினால், அதுவே மனதின் கட்டுப்பாடாம். அவ்வாறு நிலைத்த கண்காணிப்பு மூச்சை உறுதிப்படுத்தும். மூச்சை நெறிப்படுத்தினால், வலையில் பிடிபடும் பறவை போல மனம் அமைதியாகும். மனதை அடக்க இது ஒரு வழி. மூச்சு காற்றும், மனமும் ஒரே சக்தியின் இரு கிளைகள்.

–ரமணர்.

ஒழுக்கம்

முடிவான லட்சியம் என்ற ஒன்று இல்லாமல் போனால், நாம் ஏன் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்? இன்பமாக இருப்பதுதான் மக்களின் லட்சியம் என்றால், நாம் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொண்ட மற்றவர்களை ஏன் துன்பத்தில் ஆழ்த்திவிடக்கூடாது? அப்படிச் செய்வதில் இருந்து நம்மை தடுத்து நிறுத்துவதே ஒழுக்கம்தான்.

–விவேகானந்தர்.