கவனம் ஈர்க்கும் தொங்கும் தூண்


கவனம் ஈர்க்கும் தொங்கும் தூண்
x
தினத்தந்தி 16 May 2017 10:12 AM GMT (Updated: 16 May 2017 10:12 AM GMT)

19-ம் நூற்றாண்டில் இந்தக் கோவிலுக்கு வந்த பிரிட்டிஷ் பொறியாளர், இந்த தொங்கும் தூணை சீரமைக்க பெரும்பாடு பட்டாராம்.

வீரபத்திர சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் தொங்கும் தூண், பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது. லே- பட்சி கோவில்களின் கலை சிறப்பும் அதுவே. முடிந்தும், முடியாமல் நிற்கும் கல் மண்டபத்தில் மொத்தம் 70 தூண்கள் உள்ளன. அதில் ஒன்று மட்டும் தரையை தொடாமல், அந்தரத்தில் மிதந்தபடி இருக்கிறது. தரைக்கும், தூணிற்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பதால் பக்தர்கள் ஆச்சரியத்தோடு அதை ரசிக்கிறார்கள். வேறு சிலரே இருக்கும் இடைவெளியில் குச்சிகளையும், துணிகளையும் உள்நுழைத்து, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்கிறார்கள். 19-ம் நூற்றாண்டில் இந்தக் கோவிலுக்கு வந்த பிரிட்டிஷ் பொறியாளர், இந்த தொங்கும் தூணை சீரமைக்க பெரும்பாடு பட்டாராம். ஆனால் 3 ஆண்டுகால இணைப்பு பணி இடம் தெரியாமல் போனாதல், விரக்தியுடன் ஊர் திரும்பியதாக ஒரு செவிவழி செய்தியும் உலவுகிறது.

Next Story